• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைக்கால கட்டிடங்கள்]

யுவான் வம்ச ஆட்சிக்கால கட்டிடங்கள்  

யுவான் வம்ச காலத்தில்(கி.பி. 1206-1368)மங்கோலிய இன ஆட்சியாளர் ஒருவர் சீனாவை, விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு இராணுவ ஏகாதிபத்திய நாடாக நிறுவினார். ஆனால் அக்காலகட்டத்தில் சீனாவின் பொருளாதாரமும் பண்பாடும் மந்தமாகதான் வளர்ந்தன. கட்டிடத் துறையும் வளர்ச்சியடையவில்லை. பெரும்பாலான கட்டிடங்கள் எளிமையாகவும் கலைநயமற்றதாகவும் இருக்கின்றன.

யுவான் வம்சாட்சியின் தலைநகரான தாது(இன்றைய பெய்சிங் மாநகரத்தின் வடப் பகுதி)மிகவும் பிரமாண்டமானது, இது, மிங் வம்சாட்சி மற்றும் சிங் வம்சாட்சியின் தலைநகரமாக திகழ்ந்தது. பெய்சிங் அப்போது தான் ஒரு நகரமாக தோற்றமளிக்கத் துவங்கியது. இன்று வரை நிலவும் யுவான் வம்ச காலத்திலான தையோச்சி ஏரியும் வான்சுய்ஷன் மலையும் (இன்றைய பெய்ஹை பூங்காவிலுள்ள ச்சுங் தௌ தீவு)அப்போது புகழ்பெற்ற காட்சித் தலங்களாக விளங்கியன.

யுவான் வம்சாட்சியாளர் மத நம்பிக்கை மிக்கவர். குறிப்பாக, திபெத் புத்த மதத்தை அவர் மிகவும் நம்புகிறார். எனவே அக்காலத்தில் மதக் கட்டிடங்கள் பெரிதும் வளர்ச்சியுற்றன. பெய்சிங்கிலுள்ள மியோயிங் கோயிலுள்ள பை தா கோபுரம், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரால் வடிவமைத்துக் கட்டப்பட்ட லாமா கோபுரமாகும்.

படம்பை தா கோபுரம்

மிங் வம்ச ஆட்சிக்காலக் கட்டிடங்கள்

மிங் வம்சாட்சிக்காலம் (கி. பி. 1368ஆம் ஆண்டுமுதல் 1644ஆம் ஆண்டு வரை)தொட்டு, சீனா நிலப்பிரப்பு சமூகத்தின் பிற்காலத்தில் நுழைந்தது. இக்காலகட்டத்தில் கட்டிடங்கள் எல்லாம் சோங் வம்சாட்சிக்காலத்தின் மாதிரியை ஏற்றுக்கொண்டன. அவற்றில் குறிப்பிட்ட மாற்றம் இல்லை. ஆனால், கட்டிடங்களின் வரைவில், பிரமாண்டமும், கம்பீரமும் முக்கிய சிறப்பியல்பாகும்.

இக்காலகட்டத்தில் நகரங்களின் வடிவமைப்பும், அரசு மாளிகையும் பிற்காலத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. தலைநகரான பெய்சிங் மாநகரம், தற்போது நிலவும் அளவில் மிக பெரிய பழைய நகரமான நான்ஜிங் ஆகியவை மிங் வம்சாட்சிக் காலத்திலான வடிவமைப்பு மற்றும் நிர்வாத்தினால் நன்மை பெற்றன. ச்சிங் வம்சாட்சிக்காலத்திலான பேரரசர் மாளிகைகளும் மிங் வம்சாட்சிக்காலத்தின் அரசு மாளிகையின் அடிப்படையில் இடைவிடாமல் விரிவாகி வளர்கின்றன. இக்காலகட்டத்திலான பெய்சிங் மாநகரமும் ஏற்கனவே உள்ள அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது. பின்னரே, புற நகரம், உள்நகரம், அரச குடும்ப நகரம் ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

மிங் வம்சாட்சிக் காலத்தில் நகரின் பாதுகாப்புக்காக, சீனப் பெருஞ்சுவர் தொடர்ந்து பெரும் முயற்சியுடன் கட்டப்பட்டது. பெருஞ் சுவரின் பல முக்கிய பகுதிகளும் நுழைவாயில் கோபுரங்களும் செங்கற்களால் கட்டப்பட்டன. கட்டுமானத் தரம் உச்ச நிலையை எட்டியது. மிங் வம்சாட்சிக் காலத்தில் பெருஞ் சுவர், கிழக்கில் யாலூஜியாங் ஆற்றங்கரையிலிருந்து மேற்கில் கான்சு மாநிலத்து ஜியாயுக்குவான் எனும் இடம்வரை செல்கின்றது. மொத்த நீளம் 5660 கிலோமீட்டராகும். ஷான்ஹைக்குவான், ஜியாயுக்குவான் முதலிய புகழ்பெற்ற நுழைவாயில் நகரங்கள் சீனக் கட்டிடக் கலையில் தனிச்சிறப்பு பாணியைக் கொண்ட தலைசிறந்த படைப்புகளாகும். தற்போது பெய்சிங்கிலுள்ள பாதாலிங் பெரும் சுவர் பகுதியும் சுமாதை பெரும் சுவர் பகுதியும் ஒப்பீட்டளவில் உயர் கலை மதிப்பை கொண்டிருக்கின்றன.

  படம்பெருஞ்சுவர்

 இக்காலக்கட்டத்தில், மாளிகை மாதிரி கட்டிடங்களின் அலங்காரம், வண்ண ஓவியம் ஆகியவை படிப்படியாக நிலைபெற்றன. அலங்காரப் பொருட்களில் பல செங்கல், வண்ணமும் பளபளப்பும் உடைய ஓடு, கடின மரம் உள்ளிட்ட வேறுபட்ட தரமுடைய படைப்புகளும் காணப்படுகின்றன. குடியிருப்பு வீடுகளின் சுவரில் செங்கல் பரவலாக பயன்படுத்தப்பட்டது.

மிங் வம்சாட்சிக் காலத்தில், சீனக் கட்டிடங்களின் ஒழுங்குமுறை மேலும் பக்குவமடைந்தது. நான்ஜிங் நகரிலுள்ள மிங்சியோ கல்லறை, பெய்சிங்கிலுள்ள 13 பேரரசர் கல்லறைகள் ஆகியவை நில அமைவையும் சுற்றுச்சூழலையும் நன்றாக பயன்படுத்தியதால், கல்லறை மிகவும் அமைதியாக திகழ்வதில் ஒரு சிறந்த மாதிரியாக விளங்குகின்றன.

பெங்ஷுயி (வாஸ்து சாஸ்திரம்)என்பது,மிங் வம்ச ஆட்சிக்காலத்தில் மிகுதியும் வளர்ந்தது. சீனக் கட்டிட வரலாற்றில் சிறப்புமிக்க பண்டைக்கால பண்பாட்டு நிலைமை, நவ காலம் வரை நீடித்துவருகின்றது. தவிர, மிங் வம்சாட்சிக்காலத்தின் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களும் உலகில் புகழ்பெற்றவை.

ச்சிங் வம்ச ஆட்சிக்காலக் கட்டிடங்கள்

ச்சிங் வம்சம் (கி.பி. 1616-1911)சீனாவின் கடைசி நிலப்பிரப்புத்துவ வம்சாட்சியாகும். அக்காலத்தில், கட்டிடங்கள் பொதுவாக மிங் வம்சாட்சியின் பாரம்பரியத்தை ஏற்று, கட்டிடங்கள் மேலும் நுணுக்கமாகவும் அழகாகவும் கட்டப்பட்டன.

ச்சிங் வம்சாட்சியின் தலைநகரான பெய்சிங் அடிப்படையில் மிங் வம்ச ஆட்சியின் நிலைமையை நிலைநிறுத்தியது. உள்நகருக்கு மொத்தம் 20 கம்பீரமான நுழைவாயில் கட்டிடங்கள் இருந்தன. அவற்றில் செங்யாங்மன் எனும் நுழைவாயில் கட்டிடம் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரம். மிங் வம்சாட்சிக் காலத்தில் பேரரசர் மாளிகை வடிவத்தில் பெரும் அளவிலான அரச குடும்ப பூங்காக்களை ச்சிங் வம்சப் பேரரசர்கள் கட்டியமைத்தனர். அவற்றில் எழில்மிக்க யுவான்மிங்யுவானும், கோடைக்கால மாளிகையும் குறிப்பிடத்தக்கவை. அளவில் மிக பெரியவை. இக்காலகட்டத்தில் சீனாவின் கட்டிடங்களில் கண்ணாடியும் பயன்படுத்தப்பட்டது. பல்வடிவ சுயோச்சை மாதிரியுடைய குடியிருப்பு வீடுகளும் அதிகமாக காணப்பட்டன.

சிறப்புப் பாணியுடைய திபெத் புத்தமத கட்டிடங்கள் இக்காலகட்டத்தில் ஓங்கிவளர்ந்தன. இந்தப் புத்தமத கோயில்கள் பல மாதிரியாக வண்ணமயமாகவும் கட்டப்பட்டன. பெய்சிங் மாநகரிலுள்ள யுங்ஹோ மாளிகையும் ஹெப்பெய் மாநிலத்து செங்தே நகரில் கட்டப்பபட்ட பல திபெத் புத்தமத கோயில்களும் அப்போதைய புத்தமதக் கட்டிடங்களின் பாணியை சரிவர வெளிப்படுத்தியுள்ளன.

ச்சிங் வம்சாட்சியின் பிற்பாதியில் சீனாவில், சீனப் பாணியும் மேலை நாட்டுப் பாணியும் ஒன்றிணையும் புதிய கட்டிடங்களும் தோன்றின.

(யுங்ஹோ மாளிகை)


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040