• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[பண்டைக்கால கட்டிடங்கள்]

சோங் வம்ச ஆட்சிக்கால கட்டிடங்கள்  

சோங் வம்ச ஆட்சியில், (கி.பி 960-1279 )பழைய சீனாவின் அரசியல், இராணுவம் ஆகிய துறைகளில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியடைந்தது. ஆனால், பொருளாதாரம், கைத்தொழில், வணிகம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டிருந்தது. அறிவியல் தொழில் நுட்பத் துறையில் மேலும் பெரும் முன்னேற்றம் அடைந்தது. இந்த காலகட்டத்தில், நுண் கலை, அலங்காரம் ஆகியவற்றுக்கு தரப்பட்ட முக்கியத்துவம் சிறப்பியல்பாகும்.

சோங் வம்சாட்சியில், நகரங்களின் தெருவில் கடைகளும், கட்டிடங்களும் வரிசை வரிசையாக கட்டப்பட்டது, நகரத் தீயணைப்பு, போக்குவரத்து, சரக்கு ஏற்றியிறக்கல், கடைகள், பாலங்கள் முதலியவற்றில் புதிய வளர்ச்சி ஏற்பட்டது. வட சோங் வம்சாட்சியின் தலைநகரான பியன்லீயாங் நகரம் (இன்றைய ஹோனான் மாநிலத்து கைப்போங் நகரம)ஒரு வணிக நகரமாக தோற்றமளித்தது. கட்டிடத்தின் முக்கிய பகுதியை மேலும் தெளிவுப்படுத்தும் பொருட்டு, இக்காலகட்டத்தில், சீனாவின் கட்டிடங்கள் மேலும் உயரமாக கட்டப்பட்டன. கட்டிடங்களை அழகுபடுத்துவதும், வண்ணம் பூசுவதும் பெரிதும் வளர்க்கப்பட்டன. ஷான்சி மாநிலத்து தையுவான் நகரின் சின்ட்ஸ் எனும் கட்டிடத்திலுள்ள முக்கிய மண்டபமும், யு சௌ பெய் லியாங் எனும் பாலமும் சோங் வம்சாட்சியின் கட்டிடங்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு மாதிரி கட்டிடங்களாகும்.

 

படத்தின் விளக்கம்:

யு சௌ பெய் லியாங் எனும் சோங் வம்சாட்சிக் கட்டிடம்.

சோங் வம்சாட்சிக் காலத்தில் கல் மற்றும் செங்கல் கட்டிடங்களின் தரம் இடைவிடாமல் உயர்ந்துவந்தது. புத்த கோபுரமும் பாலமும் அப்போதைய கட்டிடங்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. செகியாங் மாநிலத்து ஹாங்சோ நகரிலுள்ள லிங்யின்சு கோபுரம், ஹோனான் மாநிலத்து கைப்பொங் நகரிலுள்ள பான் கோபுரம், ஹோப்பெய் மாநிலத்து சௌ சியன் மாவட்டத்திலுள்ள யுங் துங் பாலம் முதலியவை அனைத்தும் சோங் வம்சாட்சிக் காலத்தின் கல் மற்றும் செங்கல் கட்டிடங்களின் முக்கிய பிரதிநிதிக் கட்டிடங்களாகும்.

சோங் வம்சாட்சிக்காலத்தில், சீனப் பொருளாதாரம் மற்றும் சமூகம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்தது. சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தும் பூங்கா கட்டிடம் இக்காலத்தில் ஏற்படத் துவங்கியது. சீனாவின் பழைய பூங்கா கட்டிடங்கள், இயற்கை அழகும் செயற்கை அழகும் ஒன்றிணைந்த கட்டிடங்களாகும். கட்டிடங்களும் செயற்கை மலை, நீர் பரப்பு, கல் குவியல், மலர்ச் செடிகள், மரங்கள் முதலியவையும் குறிப்பிட்ட ஒரு வகை கலைச் சூழலை வெளிப்படுத்துகின்றன. சோங் வம்சாட்சிக்காலத்தில் பிரதிநிதித்துவம் வாய்ந்த பூங்கா கட்டிடங்களில் சோ சுன் ச்சினுடைய சாராங் திறந்த கூடாரமும், சுமாக்குவாங்குடைய துலோயுவான் பூங்கா கட்டிடமும் முக்கிய இடம்வகிக்கின்றன. சோங் வம்சாட்சிக் காலத்தில் ஒப்பீட்டளவில் முழுமையான கட்டிடத் தொழில் நுட்பம் பற்றிய "கட்டிடக் கலை"எனும் நூல் வெளியிடப்பட்டமை, அப்போது சீனாவின் கட்டிடத் துறையில் பொறியியல் நுட்பமும் கட்டுமான நிர்வாகமும் புதிய நிலையை அடைந்துள்ளதைக் குறிக்கின்றது.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040