• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நாட்டுப்புற பழக்கங்கள்]

துங்சி

துங்சி, சீனாவின் 24 பண்டிகை தினங்களில் ஒன்றாகவும், பாரம்பரிய விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. 2700 ஆண்டுகளுக்கு முந்திய சீனாவின் CHUN QIU வமிச காலத்தை இது சேர்ந்தது.

இந்த நாள், பகல் மிகவும் குறுகியதாக உள்ளது. இதற்கு பின், பகல் நாளுக்கு நாள் நீளமாக மாறுகிறது. பழைய நூலின் பதிவின் படி, துங்சி வரும் போது, மன்னர், அவருடைய அமைச்சர்களுடன் 5 நாட்கள் தொடர்ந்து இசை கேட்டார். மன்னர், காலக்குறிப்புமுறைப் புரிந்துக்கொள்ளும் வல்லுனரை அழைத்து, காலக்குறிப்பு முறையைச் சரிப்படுத்தி, வானுக்கு அஞ்சலி செலுத்தினார். உலகில் புகழ்பெற்ற சீனாவின் தியேன் தன் பூங்கா, மன்னர் வானுக்கு அஞ்சலி செலுத்தும் இடமாகும்.

பழைய காலத்தில், துங்சி என்ற நாளில், குளிர்காலத்துக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் இருந்தது. இப்போது, மக்கள் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவிக்கின்றனர். துங்சி அன்று முதல், மக்கள் ஒன்பது ஒன்பது நாட்களாகக் கணக்கிடுத்துகின்றனர். ஒவ்வொரு ஒன்பது நாட்களும், ஒரு ஒன்பதாக கூறப்படுகின்றது. முதலாவது ஒன்பது நாட்கள், முதலாவது ஒன்பதாகும். இப்படியாக, மொத்தம் ஒன்பது, ஒன்பது, எண்பத்தி ஒன்று நாட்கள். சீனாவின் ஒரு நாட்டுப்புற பாடலில், துங்சிக்கு பின்திய வானிலை மாற்றம் ஒழுங்கு வர்ணிக்கப்படுகிறது:முதலாவது மற்றும் இரண்டாவது ஒன்பது நாட்களில், கை வெளியே நீட்ட முடியாது. முன்றாவது மற்றும் நான்காவது ஒன்பது நாட்களில் விலங்குகள் குளிரால் உயிரிழந்தன. ஐந்தாவது, ஆறாவது ஒன்பது நாட்களில் மரங்கள் மீண்டும் முளைவிட துவங்குகின்றன. ஏழாவது ஒன்பது நாட்களில் ஆற்றிலுள்ள பனிக்கட்டி உருகுகிறது. எட்டாவது ஒன்பது நாட்களில், பறவைகள் திரும்புகின்றன. ஒன்பதாவது ஒன்பது நாட்களில், வசந்த காலம் வருகிறது. சீனாவில் துங்சி முதல் ஓவியத்தை வர்ணமிடுகிறது. 81 பூவிதழ்கள் உடைய மலர் திட்டப்படுகிறது. துங்சி முதல், ஒவ்வொரு நாளும், ஒரு பூவிதழின் நிறமாக இருக்கிறது. 81 பூவிதழ்கள் நிறமடையும் போது, வசந்த காலம் வரும். மேகமூட்ட நாளில், மேற் பூவிதழையும், வெயில் நாளில், கீழ் பூவிதழையும் சாயம் எடுத்துகிறது. காற்று நாளில் இடது பக்கத்தையும், மழை நாளில், வலது பக்கத்தையும் சாயம் எடுத்துகிறது. இப்படியாக, 81 நாட்களுக்கு பின், ஒரு வானிலை புள்ளியியல் படம் மாறுகிறது.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040