• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நாட்டுப்புற பழக்கங்கள்]

சின் மின் திருவிழா

ஒவ்வொரு ஆண்டின் வசந்த காலத்திலும், சீன மக்கள், பாரம்பரிய சின் மின் திருவிழாவை வரவேற்கின்றனர்.

சின் மின் திருவிழா, சீனாவின் 24 பண்டிகை தினங்களில் ஒன்றாகும். இந்த நாளில், மக்கள் புறநகர்ப்பகுதிக்குச் சென்று, முன்னோருக்கு அஞ்சலி செலுத்தி, வசந்த விளையாட்டு மற்றும் சுற்றுலா பயணத்தை மேற்கொள்கின்றனர்.

சில இடங்களில், சின் மின் திருவிழாவை, அரக்கன் விழா என்று கூறுகின்றனர். இதை முன்னிட்டு, பல்வேறு குடும்பங்களும், முன்னோரின் கல்லறைகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்துகின்றன. கல்லறை அருகில் புல்லை வெட்டி, புதிய மண் மோட்டு, ஊதுவத்தி அல்லது மெழுகுவர்த்தி ஏற்றி ஒளி கொடுத்து, காகித பணத்தை எரித்து, முன்னோருக்கு வணக்கம் செலுத்துகின்றனர். சுன் வமிச காலத்தில் (960-1279) ஒரு கவிதையில், சின் மின்னின் பழக்கவழக்கம் வர்ணிக்கப்பட்டுள்ளது:மலையில் கல்லறைகள் அதிகம். சின்மின்னில் அஞ்சலி செலுத்தியதால், காகித சாம்பல் வெள்ளை வண்ணத்துப்பூச்சியாக மாறியது. கண்ணீரும் ரத்தமும் சிவப்பு மலராக மாறின.

இவ்விழா, ஹான் வமிச காலத்திலிருந்து துவங்கி, மின், சின் வமிச காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. சிலர், முன்னோரின் கல்லறையில் காகித பணத்தை எரிப்பது மட்டுமல்ல, பத்து வகை உணவு வகைகளைச் சமைத்து படையல் செய்துள்ளனர்.

நாட்டுப்புற முக்கிய பழக்கமான சின் மின் விழா, இப்போது எளிமையாக மாறிவிட்டது. மக்கள் அடுத்தடுத்து தியாகிகளின் கல்லறைத் தோட்டத்துக்குச் சென்று, மலர் துரவி தமது மதிப்பை அளிக்கின்றனர்.

சின் மின் காலம், வசந்த காலத்தில் இருந்ததால், நீண்ட கால வளர்ச்சியில் அதன் உள்ளடக்கத்தில் விளையாட்டு இடம்பெற்றுள்ளது.

பழைய காலத்தில், சின் மின் காலத்தில், பெண்கள் புற நகரில் பசுமையான உண்ணத்தக்க காட்டுக்கீரைகளைப் பறித்து, தாம்புரின் சமைக்கின்றனர்.

சின் மின் என்ற பெயர் எப்படி வந்தது? இக்காலத்தில், வசந்த காலம் துவங்கியது. சீன மொழியில், சின் மின் என்பது, வசந்த காலத்தின் காட்சி என்ற பொருளாகும். இது, நல்ல விதைப்புக் காலமுமாகும்.

பழைய காலத்தில், சின் மின் காலத்தில், மரத்தை நடும் பழக்கம் இருந்தது.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040