• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நாட்டுப்புற பழக்கங்கள்]

சமையல் கடவுள் பற்றிய கதை

கடந்த சுமார் 2000 ஆண்டுகளாக சீனாவில் சந்திர நாள் காட்டியின் டிசம்பர் திங்கள் 23ம் நாளன்று, சமையல் கடவுளுக்கு அஞ்சலி செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

சமையல் கடவுள், வானில் இருந்து மன்னர் அனுப்பிய கடவுள் ஆவார். ஒவ்வொரு ஆண்டும் அவர் மன்னருக்கு அறிக்கை கொடுக்கின்றார். இதனால், மக்கள் அவருக்கு மதிப்பளிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டிலும் சமையல் கடவுளுக்கு அஞ்சலி செலுத்தும் வழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கதை மிகவும் அதிகம்.

பழைய காலத்தில், ZHANG SHENG என்பவர் செல்வம் உடையவர். அவரின் மனைவி பெயர் DING XIANG. அவர்கள் இன்பமாக வாழ்ந்தனர்.

ஒரு நாள் ZHANG SHENG வணிகம் செய்ய வெளியூர் சென்ற போது, HAI TANG எனும் அழகியைக் கண்டு, மயங்கி திருமணம் செய்து வீடு திரும்பினார். மேலும் அழகான DING XIANG, அதிகாரபூர்வ மனைவியாக இருந்ததால், HAI TANG மிகவும் கோபம் கொண்டாள். ZHANG SHENG க்குக் கட்டாயப்படுத்தி, DING XIANG ஐ வெளியே விரட்டினார்.

பின்பு, ZHANG SHENGகும் HAI TANGகும் நாள்தோறும் சாப்பிட்டு விளையாட்டினர். இரு ஆண்டுகளுக்கு பிறகு, செழுமையான வீடு வறுமையை அடைந்தது. HAI TANG , பணம் இல்லாத ZHANG SHENG யை விட்டு சென்றாள். ZHANG SHENGக்கு, வேறு வேலை செய்ய முடியாததால், பாதையில் பிச்சை எடுத்தார். உறைபனி பெய்ந்த நாளில், அவருக்கு பசித்தது. குளிர்ந்தது. ஒரு பணக்கார வீட்டுக்கு முன் மயங்கி விழுந்தார். அக்குடும்பத்தின் வேலையாள் அவரைக் கண்டறிந்து, சமையலறையில் தங்க வைத்தார். பிறகு, வீட்டு உரிமையாளர் அவரைப் பார்க்க வந்தார். ZHANG SHENGக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனென்றால், அவரால் கைவிடப்பட்ட DING XIANG தான் வீட்டுக்கு உரிமையாளர். அவர் வெட்கமடைந்தார். இப்போது, அவர் மறைந்துகொள்ள விரும்பினார், ஆனால், இடம் கிடைக்க வில்லை. எனவே, அவர் அடுப்புக்குள் நுழைந்து மறைந்தார். DING XIANG சமையலறைக்கு வந்த போது, அடுப்பில் ஒரு பொருளைப் பார்த்து, ZHANG SHENGகைக் கண்டறிந்தார். ஆனால், அவர் தீயில் உயிரிழ்ந்தார். DING XIANG தமது முன்னாள் கனவனைச் சந்தித்து, மிகவும் துன்பமடைந்து, சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மன்னர் இந்த நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு, ZHANG SHENG தமது பிழையைக் காண்பது நல்லது என்று கருதினார். அவரை சமையல் கடவுளாக நியமித்தார்.

பழையகாலத்தில், சமையல் கடவுள் மன்னருக்கு தனக்கு நல்ல கூற்றை சொல்லும் பொருட்டு, மக்கள் இனிப்பைப் பயன்படுத்தி சமையல் கடவுளை வழிபாடு செய்தனர். இந்த இனிப்பு மிகவும் இனிப்பாக இல்லை இருந்த போதிலும், ருசியாக இருந்தது. இதைச் சாப்பிட்ட பின்பு, சமையல் கடவுள் நல்ல கூற்றை அதிகமாக சொல்ல முடியும். இது, மக்களின் உணர்வுப்பூர்வமான விருப்பமாகும்.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040