பெய்ஜிங் இசை நாடகத்தில் முக ஒப்பனையின் வகைகள்
தலைவிதி கதாபாத்திரங்களின் தோற்றங்கள், பன்புகள் போன்றவற்றை குறிப்பால் உணர்த்துவதற்காக நடிகர்களின் முகத்தில் ஓர் வகை வண்ணக் கலவையை பூசுவது பெய்ஜிங் இசை நாடகத்தின் முக ஒப்பனையில் குறிப்பிடக் கூடிய ஓர் வகை ஆகும். வழமையாக சிவப்பு முகங்கள் ஆக்கப்பூர்வமான அர்த்தம் கொண்டுள்ளன. இது தைரியமான அறிவுள்ள மனிதனை குறிப்பால் உணர்த்துகின்றது. கறுப்பு முகங்கள் நடு நிலமையான கருத்தினைக் கொண்டிருக்கின்றன. நீல மற்றும் பச்சை முகங்கள் கூட நடுநிலமையான கருத்தினை கொண்டிருக்கின்றன. வெள்ளை, மஞ்சள் முகங்கள் எதிர்மாறான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இவை கொடூரத்தையும் நம்பிக்கை துரோகத்தையும் உள்ள மனிதனை குறிப்பால் உணர்த்துகின்றது. தங்கம், வெள்ளி முகங்கள் மாயையை குறிப்பால் உணர்த்துகின்றன. இவை அரக்கர்களை குறிக்கின்றன.

1 2 3