• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் பெய்ஜிங் ஆப்பரா]

பெய்ஜிங் இசை நாடகத்தில் கதாபாத்திரங்கள்

பெய்ஜிங் ஆப்பரா எனப்படும் இசை நாடகத்தில் நான்கு கதாபாத்திரங்கள் உள்ளன. ஆண், பெண்பாத்திரம், வர்ணம் பூசப்பட்ட முகம் உள்ள பாத்திரம் மற்றும் நகைச் சுவைப் பாத்திரம் என்பன அவை ஆகும். ஒவ்வொரு கதாபாத்திரமும் அவற்றின் சொந்த குறிப்பிடப்பட்ட அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன.

சீன மொழியில் ஷெங் என அழைக்கப்படுகின்ற ஆண் கதாபாத்திரமானது வயது முதிர்ந்த மனிதன் (லாஓ ஷெங்)நடுத்தர வயது மனிதன் என பிரிக்கப்படுகின்றது. இது எப்போதும் ஒரு சக்கரவர்த்தி அல்லது நாகரீகமான மனிதனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. (ஸிஆஒ ஷெங் இளமையான மனிதனை குறிக்கின்றது.)

சீன மொழியில் த்டான் என அழைக்கப்படுகின்ற பெண் கதா பாத்திரமானது இளம் மற்றும் நடுத்தர வயது பெண்ணை (ச்சிங் ஈ)குறிப்பிடுகின்றது. இப்பெண் எப்போது மிக உயர்ந்த குடும்பத்தில் செல்வி அல்லது திருமதியாக நடிக்கின்றார். "உ த்டான்" என்பது சண்டை செய்யும் பெண்ணை கருதுகின்றது. "குவா த்டான்" என்பது எப்போதும் ஒரு வேலைக்காரியாக நடிக்கின்ற இளஞ்சிறுமியைக் குறிப்பிடுகின்றது.

"ஜிங்"(வர்ணம் பூசப்பட்ட முகமுடைய பாத்திரம்)எல்லா வகையான வர்ணம் பூசப்பட்ட முகங்களைக் குறிப்பிடுகின்றது. மேலும் இது குறிப்பிடப்பட்ட ஆளுமை அல்லது தோற்றத்தைக் கொண்ட ஆண் பாத்திரம் போன்று நடிக்கின்றது.

"மோ" கூட லாஓ ஜெங்குக்கு உரித்தானதாகும். ஆனால், இவர் ஆழ்ந்த சிந்தனை அற்ற, கீழான சமூக அந்தஸ்து உள்ள மிகவும் வயது முதிற்தவர் ஆவார். இது ஏனெனில் ஓப்பனையின் போது அவர் ஒரு சிறிய வெள்ளைப் புள்ளியை மூக்கில் இடுவார். இவர் பலவர்ணங்களை முகத்தில் தடவியிருப்பதால் கோமாளி எனப்படுகின்றார். பொதுவாக மூன்று வர்ணங்கள் பூசப்பட்ட முகத்தைக் கொண்டுள்ளார்.

"சோஉ" (கோமாளியைக் குறிக்கும் நகைச் சுவை முகம்)எப்போதும் புத்திசாலியாக வேடிக்கை மனிதனாக அல்லது கீழான சமூக அந்தஸ்த்தை உடைய மனிதனாக நடிக்கின்றார்.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040