• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் பெய்ஜிங் ஆப்பரா]

பெய்ஜிங் இசை நாடகத்தின் வரலாறு

சீன பெய்ஜிங் இசை நாடகம் கீழைத்தேச இசை நாடகம் என அழைக்கப்படுகின்றது. இது சீன நாகரீகத்தின் பாரம்பரிய தத்துவங்களில் இருக்கின்றது. இது பெய்ஜிங்கில் உருவாக்கப்பட்டதனால் பெய்ஜிங் இசை நாடகம் என அழைக்கப்படுகின்றது.

பெய்ஜிங் இசை நாடகம் 200 ஆண்டுகள் வரலாற்றினைக் கொண்டுள்ளது. இதனுடைய மூலம் பழைய உள்நாட்டு இசை நடகங்களில் உள்ளது. சிறப்பாகக் கூறுவோமாயின் 18ஆம் நூற்றாண்டில் அன்குய் இசை நாடகம் வட சீனாவில் மிகவும் பிரபலமாக இருந்தது. 1790 இல் சர்க்கரவர்த்தியின் பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு அன்குய் இசை நாடகம் பெய்ஜிங்கிற்கு வந்தது. பின்னர், சில அன்குய் இசை நாடகங்கள் பெய்ஜிங்கில் அரங்கேற்றப்பட்டன. அன்குய் இசை நாடகமானது ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வதற்கும், ஏனைய வகை இசை நாடகங்களின் நடிப்பு அம்சங்களை உள்வாங்குவதில் சிறந்ததாகவும், சுலபமானதாகவும் இருந்தது. பெய்ஜிங் பல உள்ளூர் இசை நாடகங்களை திரட்டியது. இது அன்குய் இசை நாடகம் மிக வேகமாக வளர்வதற்கு உதவியது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் 10 வருட இணைவுக்குப் பின்னர் பெய்ஜிங் இசை நாடகம் என்ற இறுதி வடிவம் பெற்று, சீனாவிலேயே மிகப் பெரிய இசை நாடக வகையாக உருவெடுத்தது.

பெய்ஜிங் ஆப்பரா என்னும் இசை நாடகத்தில் நாடகங்கள், கலைஞர்கள், பணியாளர்கள், ரசிகர்கள், பரந்த அளவிலான செல்வாக்கு என்று செழுமையான அம்சங்கள் மிகுந்து, இது சீனாவில் முதலிடம் வகிக்கின்றது. பாடுவது, வாசிப்பது, சண்டையிடுவது, நடனமாடுவது, ஆகிய அனைத்துத் திறன்களையும் ஒன்றுபடுத்தி, கதைகளையும், கதைமாந்தர்களையும் விவரிக்கும் விரிவான நடிப்புக் கலைதான் பெய்ஜிங் ஆப்பரா எனப்படுகின்றது. பெய்ஜிங் இசை நடகத்தில் கதாபாத்திரங்கள் ஆண், பெண், வர்ணமிடப்பட்ட முகம் மற்றும் நகைச்சுவைக் கதாபாத்திரம் போன்றவை உள்ளன. தவிரவும், ஏனைய துணைக் கதாபாத்திரங்களும் உள்ளன.

பெய்ஜிங் இசை நாடகத்தில் முக ஒப்பனை மிகவும் குறிப்பிடக் கூடிய ஓர் கலையாகும். ஏனெனில் ஒருவரின் தோற்றத்தையும், பண்களையும், கதாபாத்திரங்களின் தலைவிதியையும் குறியிட்டுக் காட்டலாம். உதாரணமாக சிவப்பு கலர் விசுவாசத்தையும் வீரத்தையும் குறியிட்டுக் காட்டுகின்றது. ஊதா நிறமானது அறிவையும் தைரியத்தையும் குறிப்பால் உணர்த்துகின்றது. கறுப்பு நிறமானது நீதியையும் நேர்மையையும் காட்டுகின்றது. வெள்ளை நிறமானது கொடுரூரத்தையும் வஞ்சகத்தையும் குறித்து நிற்கின்றது. நீலம் பலத்தையும் துணிவையும், மஞ்சள் நம்பிக்கைத் துரோகத்தையும் வெளிப்படுத்துகின்றன. தங்கம் மற்றும் வெள்ளி நிறங்கள் புரியாத புதிராக உள்ள கடவுளையும், அரக்கர்களையும் குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றன.

18ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமானது, பெய்ஜிங் இசை நாடகத்தின் வளர்ச்சியில் மிக செழிப்பான காலப்பகுதியாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தக் காலப் பகுதியில் பொது மக்கள் உள்ள இடங்களில் மட்டும் அல்லாது மாளிகைகளிலும் கூட பல அரங்கேற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. பிரபுக்கள் பெய்ஜிங் இசை நாடக்த்தை இரசித்தனர். மாளிகையில் உன்னதமான நோக்கங்கள் மேடையமர்வுகளில், ஒப்பனைகள் மேடை அமைப்பு போன்றவற்றில் ஓர் நேரான பங்கினை வகித்தன. மாளிகைக்கும் அரச சார்ப்பற்ற இடங்களுக்கும் இடையே உள்ள செல்வாக்கு பெய்ஜிங் இசை நாடகத்தினுடைய வளர்ச்சியை மேம்படுத்தின.

கடந்த நூற்றாண்டின் 20களில் இருந்து 40கள் வரை பெய்ஜிங் இசை நாடகத்தின் இரண்டாவது செழிப்புக்காலமாக இருந்தது. இந்தக் காலப் பகுதியின் அடையாளமானது பெய்ஜிங் இசை நாடகத்தின் பல பிரிவுகளின் தோற்றமாக இருந்தது.

மெய்(மெய் லான்ப்பாங் 1884-1961) ஷாங்(ஷாங் சியாஒ யுன் 1900-1976), செவ்(செவ் யான்ச்சியும் 1904-1958) மற்றும் சுன் (சுன் குய்ஜெங் 1890-1968) ஆகிய நான்கு பிரிவுகளும் புகழ் பெற்றவை. ஒவ்வொரு பிரிவிலும் அதன் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் குழு இருந்தது. மேலும் இவர்கள் ஷாங்காய், பெய்ஜிங் போன்ற மேடைகளில் மிகவும் தீவிரமாக இயங்கினர்.

பெய்ஜிங் இசை நாடகத்தின் கலையானது அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது. (பெய்ஜிங் இசை நாடகத்தின் நான்கு குழுக்கள், மெய் லான்ப்பாங், செவ் யான்ச்சியு, சுன் குய்ஜெங், சாங் சியாஒ யுன்.)

மெய் லான்ப்பாங் பெய்ஜிங் இசை நாடகத்தில் உலக அளவில் மிக முக்கியமான ஒருவராக இருந்தார். அவர் எட்டு வயதாக இருந்த போது, இசைநாடகத்தைக் கற்றார். பதினொரு வயதில் மேடையில் நடிக்க ஆரம்பித்தார். அவர் ஐம்பது ஆண்டுகால அனுபவத்தில் பல நடிப்பு தளங்களை உருவாக்கி அபிவிருத்தி செய்துள்ளார். நடித்தல், பாடுதல், ஒப்பனை மற்றும் உடை அவங்காரம் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை அவருடைய சொந்தப் பாணியில் உருவாக்கப்பட்டவை ஆகும். 1919இல், மெய் லான்ப்பாங் ஜப்பானுக்கான இசை நாடக குழுவுக்கு தலைமை தாங்கினார். இது சீனா தனது கலையினை சர்வதேசத்திற்கு பரப்பியதில் முதல் முறையாகும். 1930இல் மெய் லான்ப்பாங் இந்தக் குழுவை அமெரிக்காவுக்கு தலைமை தாங்கி சென்று, பெரிய வெற்றி பெற்றார். அவர் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெற்றார். 1934இல் இவர் ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய அழைக்கப்பட்டார். அந்தப் பயணத்தில் ஐரோப்பிய இசை நாடக உலத்தை கவர்ந்து ஈர்ப்பதற்கு அதிக கவனம் செலுத்தினார். பின்னர், உலகத்தில் ஏனைய நாடுகள் பெய்ஜிங் இசை நாடகத்தை சீனாவின் நடப்பின் ஒரு பகுதியாக கருத்தில் எடுத்தன. சீர்திருத்தம் மற்றும் திறந்த கொள்கையின் பின்னர் பெய்ஜிங் இசை நாடகம் ஒரு புதிய வளர்ச்சியை அடைந்தது. சிறப்பாக, சீனாவின் பாரம்பரிய கலாச்சாரம் போன்ற பெய்ஜிங் இசை நாடகம் அரசாங்கத்திடம் இருந்து மிக உயர்ந்த ஆதாரவினைப் பெற்றது.

(மெய் லான்ப்பாங், செவ் யான்ச்சியும், சுன் குய்ஜெங், ஷாங் சியாஒ யுன்)

இன்று பெய்ஜிங் சாங் என்ற இசை நாடக இல்லம் சர்வதேச போட்டிகளை நடத்துகின்றது. இது பல்வேறு நாடுகளில் இருந்து பல மக்களை கவர்கின்றது. பெய்ஜிங் இசை நாடகம் சீனர்களுக்கும் பல ஏனைய வெளிநாட்டு கலாச்சாரங்களுக்கும் இடையில் தொடர்பை உண்டாக்கும் சிறப்புக் கலை நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.


1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040