• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் உள்ளூர் இசை நாடகங்கள்]

ஹுவாங் மெய் இசை நாடகம்

ஹுவாங் மெய் இசை நாடகம் ஆரம்பத்தில் ஹுவாங் மெய் நாதம் அல்லது தேயிலை கொய்தல் இசை நாடகம் என அழைக்கப்பட்டது. இது ஒரு பொதுஜன இசை நாடகமாக அன்குய், ஹு பெய் மற்றும் ஜியாங்சி மாநிலங்களில் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது. இதன் ஒரு பிரிவு ஹுவாய்னிங் கோட்டத்திற்கு மாற்றப்பட்டது. இது அன்ச்சிங்கின் மத்தியல் இருந்து இப்பிரதேசத்தின் உள்ளூர் கலையுடன் கலந்தது. பாடலுக்கும் வர்ணனைக்கும் உள்ளூர் மொழியைப் பயன்படுத்தியது.

தொடர்ந்து இது இதன் சொந்த நடிப்புக்களை ஹுவாய் உருவாக்கியது ஹுவாய் நாதம் என அழைக்கப்பட்டது. இது ஹுவாங் மெய் இசை நாடத்தில் முதல் நிலை ஆகும். 19ஆம் நூற்றாண்டின் நடுவில் இது ச்சிங்யாங் மற்றும் ஹுய் நாதங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டு ஹுவாங் மெய் இசை நாடகம் பாதுகாக்கப்பட்ட பிரதி இசை நாடகத்துக்குள் வளர்க்கப்பட்டது. இசை நாடகத்தின் ஒரு பிரிவு போன்று ஹுவாங் மெய் இசை நாடகம் படிப்படியாக தெரிய வந்ததுடன் ஏனையவர்களால் ஏற்றக் கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் ஹுவாங் மெய் இசை நாடகம் பிரதானமாக நடனத்தை விட பாடலினாலேயே நடிக்கப்பட்டிருந்தது. இது நிலையான மாதிரியை கொண்டிருக்கவில்லை. ஆனால், இயற்கையான வாழ்க்கையை நக்கல் செய்வதாகவே இருந்தது. சில இசை நாடகங்களில் தள்ளுமுள்ளு காட்சிகள் இருந்தன. அந்தச் சுவை நாடகங்கள் ச்சிங்யாங் நாதம் மற்றும் ஹுய் நாதம் போன்றவற்றில் இருந்து மாற்றப்பட்டன. ஹுவாங் மெய் இசை நாடகத்தின் நடிகர்கள் பிரதானமாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களில் இருந்து வந்தனர். மேலும் நடிப்பு பண்டம் வழமையாக பார்வையாளர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டதாகும். இந்தக் காலத்தில் ஹுவாங் மெய் இசை நாடகமானது தொழிலாளர்கள் தாங்களாகவே மகிழ்ச்சியடைவதற்கான கலை வடிவமாக இருந்தது.

ஹுவாங் மெய் இசை நாடகம் சந்தப்பாடல்கள் என்றும், உச்ச ஒலி பாடல் பிரிக்கப்படுகின்றது. இனிய சந்தப் பாடல்களைக் கொண்ட சிறு இசை நாடகங்களில், நாட்டுப் புற இசை ஆதிக்கம் செலுத்தியது. உச்ச ஒலி இசை நாடகம், வர்ணனை மற்றும் பாடல்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040