• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் உள்ளூர் இசை நாடகங்கள்]

குன்ச்சு இசை நாடகம்

குன்ச்சு இசை நாடகமும் தனது வளர்ச்சியில், குச்சியாங், குன் நாதம், குன்ச்சு போன்ற வேறுபட்ட பெயர்களைக் கொண்டிருந்தன. பொதுவாகக் கூறினால் குன்ச்சியாங் என்பது இசை நாடக சுருதிகளை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. குன்ச்சு என்பது நீண்ட வசனத்தை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. இது நடிப்பு கலைகளை கருதுகின்ற ஒரு வகை இசை நாடகமாகவும் இருக்கின்றது.

குன்ச்சு இசை நாடகம் இசை நாடகத்துறையில் 230 வருடங்களுக்கு மேலாக ஒரு மன்னனைப் போல செழித்தோங்கி வளர்ச்சியடைந்தது. இது மிங் அரசு வம்சத்தில் இருந்து ச்சிங் அரசு வம்சம் (1570-1800)வரை எனக் கூறப்படுகின்றது. இது குன்ச்சு இசை நாடகத்தின் செழிப்பான வளர்ச்சி காலத்திற்கு தளமாக இருந்தது. புதிய தொழில்கள் தொடர்ச்சியாக வளர்ந்தன. நடிப்புக் கலை மேலும் பக்குவமடைந்தது. வேறுபாடுகள் மேன்மேலும் குறிப்பானவையாக இருந்தது. நடிப்பு வடிவத்தில் குன்ச்சு இசை நாடகம் சுருக்க முடியாத பழங்கதை வடிவத்தில் இருந்து ஜெசி இசை நாடக வடிவத்திற்கு மாறியது. ஜெசி இசை நாடகம் ஒரு இசை நாடகத்தின் சிறந்த அங்கங்களை தெரிந்து எடுத்து விரிவாக்கியது. இது தொடர்ந்து ஒரு சுதந்திரமான சிறு இசை நாடகமாக வெளிவந்தது. ஜெசி இசை நாடகம் குன்ச்சு இசை நாடத்துக்குள் தனது தெளிவான கதை, உன்னதமான நடிப்பு மற்றும் வேறுபட்ட கலை வடிவங்களை பயன்படுத்தி ஒரு உயிர்த்துடிப்பான தோற்றத்தினை கொண்டு வந்தது. இதன் மூலம் சுதந்திரமான குறுநாடகமானது.

குன்ச்சு இசை நாடகத்தில் ஏராளமான வகைகள் இருந்தன. இதனுடைய நாடக கதையாக்கம் மிகச் சிறந்தது. பல வரிகள் கவிதைகளில் இருந்து வருகின்றன. மறுபுறத்தில் குன்ச்சு இசை நாடகம் ஒரு குறிப்பிடப்பட்ட சுருதி அமைப்பினையும், பூரணமான நடிப்பு அமைப்பினையும் கொண்டிருக்கின்றது. குன்ச்சு இசை நாடகம் பாடல், ஆடல், கதை கூறல், ஒன்று சேர்ந்து நடித்தல் போன்றவற்றை ஒன்றிணைக்கின்ற முழுமையான ஒரு கலை ஆகும். இலக்கியம், இசை சீன இசை நாடகத்தின் நடணம் என்பன எல்லாம் குன்ச்சு இசை நாடக வளர்ச்சியில் முழுமையடைந்து, கச்சிதமாக உருவெடுத்தி பக்குவமடைந்தது.

குன்ச்சு இசை நாடகத்தின் வளர்ச்சியானது சீன இசை நாடக வளர்ச்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இது பெய்ஜிங் இசை நாடகம், சுயான் இசை நாடகம், சியாங் இசை நாடகம் மற்றும் ஹுவாங் மெய் இசை நாடகம் போன்றவற்றின் வளர்ச்சியில் நேரடி செல்வாக்கினைக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக மக்கள் எப்போதும் இதனை எல்லா இசை நாடகங்களின் தந்தை என குறிப்பிடுகின்றனர்.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040