• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் உள்ளூர் இசை நாடகங்கள்]

ஹெனான் இசை நாடகம்

ஹெனான் இசை நாடகம் பொதுவாக ஹெனான் பாங்சி என அழைக்கப்படுகின்றது. ஹெனான் இசை நாடகம் என்ற பெயர் நவ சீனா உருவாக்கப்பட்ட பின்னர் பயன்படுத்தப்பட்டது. ஹெனான் இசை நாடகம் ஹெனான் ஹெபெய் சான்தொங், சான்சி, ஹு பெய், நிங்சியா, சின்ச்சியாங் போன்றவற்றில் ஒரு அதிக செல்வாக்கு பெற்ற இசை நாடகமாக சீனாவில் பிரபலமடைந்தது.

ஹெனான் இசைநாடகம் மிங் வம்சத்தின் முடிவிலும் ச்சிங் வம்சத்தின் தொடக்கத்திலும் வளர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இது பிரதானமாக சாதாரண மக்களால் விரும்பப்படுகின்ற ஒப்பனை இல்லாத பாடல் காட்சிகளாக இருந்தது. இதன் விளைவாக இது துரிதமாக வளர்ச்சியடைந்தது. ஹெனான் இசை நாடகத்தின் தோற்றத்தை கண்டறிவது மிகவும் கடினம், அதனுடைய தோற்றம் பற்றி வெவ்வேறு கருத்துக்களை கூறப்படுகின்றன.

இதன் உருவாக்கத்தின் பின்னர் ஹெனான் இசை நாடகம் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பிரதானமாக நான்கு பகுதிகள் இருக்கின்றன. சியாங்ப்பு நாதம்(கைபெங் என்ற பிரதேசத்தை மையப்படுத்தியது) யுதொங் நாதம்(ஜாங்ச்சி பிரதேசத்தை மையப்படுத்தியது) யுசி நாதம் (லுஒயாங் ஐ மையப்படுத்தியது)மற்றும் ஜாஹெ நாதம்(லுஒஹெஐ மையப்படுத்தியது) என்பன அவையாகும். யுதொங் நாதம், யுசி நாதம் என்பன பிரதான பிரிவுகள் ஆகும். யுதொங் நாதம் எப்போதும் நகைச்சுவைப்பாணியை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. யுசி நாதம் எப்போதும் துக்ககரமான பாணியை வெளிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

ஹெனான் இசை நாடகம் எப்போதும் பான்கு, ஆர்கு, சன்சியன், பிபா, த்திசி, வெங் மற்றும் சுனா என்பவற்றை ஒன்றிணைக்கின்றது.

ஹெனான் இசை நாடகத்தின் பாணிகளாக முதலில் மனதை உருக்குகின்ற பெரிய காட்சி நடிப்புக்களைக் குறிப்பிடலாம். இரண்டாவதாக இது இயற்கையானதாகவும் சாதாரண மக்களுடைய வாழ்க்கையுடன் மிக நெருங்கியதாகவும் இருக்கின்றது. கடைசியாக முரண்பாடுகள் தெளிவாக இருக்கின்றது. கதை முழுமையடைந்தது.

1929க்கு முன்னர் ஹெனான் பாங்சியில் நடிகைகள் இருக்கவில்லை. நடிகைகள் தோன்றிய பின் இது ஐந்து நடிப்பு பகுதிகளாக உருவாக்கப்பட்டது. இது சாங் சியாங்யு, சென் சுஜென், மா ஜின்பெங், யான் லிபின், சுய் லன்ரியன் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கின்றது. சாங் உள்ளத்தை உருக்குவதாகவும், ஆர்வம் கொண்டதாகவும் இருக்கின்றது. சென் லேசாகவும், புதிதாகவும் இருக்கின்றது. மா சக்திவாய்ந்ததாகவும் பிரகாசமானதாகவும் இருக்கின்றது. சுய் ஆழமானதாகவும் கலகலப்பில்லாமலும் இருக்கின்றது. யான் சுலபமானதாகவும் மென்மையாகவும் இருக்கின்றது.

ஹெனான் இசை நாடகத்தில் 1000க்கும் அதிகமான பாரம்பரிய கதைக் கருத்துக்கள் இருந்தன. இவை பெரும்பாலும், வரலாற்றுக்கதைகளில் இருந்தன. ஏனையன தெளிவான திருமணங்கள் மற்றும் அன்பு, நல்ல ஒழக்கங்களில் இருந்தும் வருகின்றன. நவ சீனா உருவாக்கப்பட்ட பின் இது நிஜவாழ்க்கையை வரையறுக்கின்ற பல நவீன இசை நாடகங்களில் தோன்றியது. இது ஹெனான் இசை நாடகத்தன் முன்னேற்றத்திற்கு உதவியது.

இப்போதும் கூட ஹெனான் இசை நாடகம் பொது மக்களால் விரும்பப்படுகின்றது. ஆனால் இதன் வளர்ச்சியில் பல கடும் பிரச்சினைகள் உள்ளன. ரசிகர்களின் எண்ணிக்கை குறைகின்றது. நாடகக் குழுக்கள் உயிர் வாழ்வதே கடினமாக உள்ளது.

நடிக்கின்ற கூட்டத்தினரின் இலக்கியம் மற்றும் கலைகளின் தரமானது நவீன சமூகத்தின் தேவையில் இருந்து விலகி இருக்கின்றது. இவர்கள் ஹெனான் இசை நாடகத்தின் வளர்ச்சியில் கட்டுப்பாடு இல்லாமல் போனது. மறுபுறத்தில் இதன் பரம்பரையும் சீர்திருத்தமும் கண்மூடித்தனமானதாக இருக்கின்றது.


1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040