• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நரம்பிசைக்கருவி]

ழுவான்

ழுவான் என்பது சீனாவின் ஒரு வகை நரம்பிசைக்கருவியின் பெயர். பண்டை காலத்தில் அது சிங்பிபா என்று அழைக்கப்பட்டுவந்தது.

சுமார் 3வது நூற்றாண்டின் போது, இசையமைப்பாளர் ழுவான்சியெ என்பவர், இவ்விசைக்கருவியை மீட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டித் தேர்ச்சி பெற்றார். பொது மக்கள் அவரை மிகவும் விரும்பியதால் அவருடைய பெயரை இவ்விசைக்கருவிக்குச் சூட்டினர். இதனால் இவ்விசைக்கருவியின் பெயர் ழுவான்சியெ என்று அழைக்கப்பட்டுவந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதாவது சொங் வமிசக் காலத்தில் இவ்விசைக்கருவியின் பெயர் ழுவான் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது.

ழுவான் எனப்படும் இசைக்கருவியின் வடிவம் எளிமையானது. அது மூன்று பகுதிகளைக் கொண்டது. அதன் கட்டமைவு, அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள், மீட்டும் வழிமுறை ஆகியவை பிபா என்னும் இசைக்கருவி போல உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், தேசிய இனக் கருவிகளில் சீனா கவனம் செலுத்துவதால், ழுவான் எனும் இசைக்கருவியை இசைக் கலைஞர்கள் மாற்றியமைத்து, உச்சம், மத்திமம், கீழ் என்று 3 ஒலிகளைக் கொண்ட 3 வகை ழுவான் இசைக்கருவிகளை உருவாக்கியுள்ளனர்.

உச்சத்தில் ஒலிக்கும் ழுவான், ஒலி தெளிவானது, பெரியது. இசைக் குழுவில் அது முக்கிய பங்கு ஆற்றுகின்றது.

மத்திம ஒலி ழுவான், ஒலி மென்மையானது, கற்பனையுடையது. கூட்டுக்குரலிசையில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கிடையில் இசைக்கப்படும்.

கீழ் ஒலி ழுவான், ஒலி தாழ்ந்தது. மேலை நாட்டு இசைக்கருவிகளில் இடம்பெறும் contrabass போல கீழ் ஒலியில் இசைப்பது.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040