• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[நரம்பிசைக்கருவி]

கொங்ஹு

கொங்ஹு என்பது சீனாவின் தொன்மை வாய்ந்த நரம்பிசைக்கருவியின் பெயர். இதுவரை ஈராயிரத்துக்கு அதிகமான ஆண்டு வரலாறுடையது. பண்டை காலத்தில் இவ்விசை அரண்மனை இசைக்குழுவில் இசைக்கப்படுவது தவிர, மக்களிடையிலும் பரவலாகப் பரவியது. சீனாவின் தாங் வமிச காலத்தில் அதாவது 618வது ஆண்டு முதல் 907வது ஆண்டு வரை விரைவான பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சியினால், கொங்ஹு இசைக்கருவியை இயக்கும் கலை நுட்பமும் மிக உயர்ந்த நிலையை அடைந்தது. அக்காலத்தில் தான், இவ்விசைக்கருவி ஜப்பான், வட கொரியா உள்ளிட்ட சீனாவின் அண்டை நாடுகளுக்குள் நுழைந்தது. ஆனால், 14வது நூற்றாண்டுக்குப் பின் இது பரவாமல் இருந்தது. பழைய சுவர் ஓவியத்திலும் சிற்பத்திலும் மட்டும் இவ்விசைக்கருவிகளின் படங்கள் சில காணலாம்.

கடந்த நூற்றாண்டின் 50ஆம் ஆண்டுகள் முதல், சீன இசையமைப்பாளர்களும் இசைக்கருவித் தயாரிப்பாளர்களும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடத் துவங்கினர். பண்டை கால நூலின் பதிவேடு மற்றும் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டக் காலச் சுவர் ஓவியங்களின் படி, பல்வகை கொங்ஹு எனப்படும் இசைக்கருவிகளைத் தயாரித்தனர். இவ்விசைக்கருவிகளில் குறைப்பாடு இருப்பதன் காரணமாக, அது பரவலாக்கப்படவில்லை. கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் புதிய வகை கொங்ஹு எனப்படும் இசைக்கருவியான காட்டு வாத்து வடிவ கொஹு இசைக்கருவி தயாரிக்கப்பட்டது. அதன் அமைவு முழுமையானது. அதன் ஒலி, தேசிய இனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது. இதனால், அது பரவலாகியுள்ளது.

சீனாவின் பண்டை காலத்தில் பரவிவந்த கொங்ஹு எனும் இசைக்கருவியில், கிடக்கை கொங்ஹுவும் நிமிர்த்தி வைக்கப்படும் கொங்ஹுவும் இடம்பெற்றன. புதிய வகை கொங்ஹு, பண்டை காலத்தில் காணப்பட்ட நிமிர்த்தி வைக்கப்படும் கொங்ஹுவின் அடிப்படை அமைவின் படி தயாரிக்கப்பட்டது.

புதிய இசைக்கருவியின் அமைவு, மேலை நாட்டைச் சேர்ந்த யாழை போல உள்ளது. இவ்விசைக்கருவிக்கு 2 வரிசை தந்திகள் உள்ளன. ஒவ்வொரு வரிசைக்கும் 36 தந்திகள் உண்டு. இவ்விசைக்கருவியின் வடிவம், ஆகாயத்தில் அணிவகுத்துப் பறக்கும் காட்டு வாத்து கூட்டம் போல இருப்பதால், காட்டு வாத்து வடிவ கொங்ஹு என்று அழைக்கப்படுகின்றது.

இவ்விசைக்கருவியின ஒலி தெளிவானது, அகலமானது. அதைக்கொண்டு, பண்டை கால மற்றும் இக்கால தேசிய இன இசைகளை இசைக்கலாம். அத்துடன், நிமிர்த்தி வைக்கப்படும் இசைக்கருவியால் இசைக்கப்படும் இசையையும் இசைக்கலாம். அதன் இடது மற்றும் வலது வரிசை தந்தியின் ஒலி ஒன்றாக இருப்பதால், நிமிர்த்தி வைக்கப்படும் இரண்டு இசைக்கருவிகள் போல அது காணப்படுகின்றது. வேகமான ராகத்தை இசைப்பதில் அது வசதியாக உள்ளது. இடது கையும் வலது கையும் ஒரே நேரத்தில் மிகவும் இனிமையான மத்திம ஒலியைத் தேர்ந்தெடுத்து ராகம் இசைக்கலாம். இவ்விசைக்கருவி, இதர இசையுடன் இணை இசையாகப் பயன்படுத்தலாம். தவிர, தந்தியை மெதுவாகவோ விரைவாகவோ மீட்டுவதிலும், நடுக்க ஒலியை வெளிப்படுத்துவதிலும் இவ்விசைக்கருவி தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது.

1 2 3 4 5 6
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040