• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தாள இசைக்கருவி]

சிங்(பௌத்த மதத்தின் தட்டு இசைக்கருவி)

சிங் என்பது ஒருவகை இசைக்கருவியின் பெயர் இது. சீனாவில் மிகவும் தொன்மையான தேசிய இன இசைக்கருவி. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. இவ்விசைக்கருவி, பண்டைகால் தாய் சமுதாயத்தில், கல் என்றும், ஒலி எழுப்பும் பந்து என்றும் அழைக்கப்பட்டது. அக்காலத்தில், மக்கள் மீன் பிடித் தொழிலிலும் வேட்டையாடும் தொழிலிலும் ஈடுபட்டனர். உழைப்புக்குப் பின், அவர்கள் கல்லைத் தட்டிக்கொண்டு, வேறுபட்ட விலங்குகளைப் போல் தம்மை அலங்காரம் செய்து ஆடிப்பாடி பொழுதுபோக்கின்றனர். தட்டப்படும் இத்தகைய கல், படிப்படியாக சிங் எனப்படும் தட்டும் இசைக்கருவியாக மாறியது.

துவக்க காலத்தில், மூதாதையரின் இசை நடனங்களில் இவ்விசைக்கருவி பயன்படுத்தப்பட்டது. பின்னர், கடந்த கால மேல் நிலை ஆட்சியாளரின் போர், வழிபாடு ஆகிய நடவடிக்கைகளுக்கு ஏற்ப இசையில் பயன்படுத்தப்பட்டது.

பயன்படுத்தப்படும் இடம், இசைக்கும் முறை ஆகியவற்றின் படி, சிங் எனும் இசைக்கருவி, த்சிங், பியெசிங் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. த்சிங் எனும் இசைக்கருவியானது, கடவுளையும் மூதாதையரையும் மன்னர் வழிபாடு செய்யும் போது இசைக்கப்படும் இசைக்கருவியாகும். பியெசிங் எனும் இசைக்கருவி, சில சிங்குகளைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. அது மரச் சட்டத்தில் தொங்கவிடப்பட்டு, அரண்மனை இசையை இசைப்பதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மூன்று பேரரசுகள் ஆட்சிக்காலத்தில் பியெசிங்கின் தயாரிப்பு நுட்பம் உயர் நிலையில் இருந்தது.

1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில், சீனாவின் தொல்பொருள் ஆய்வாளர்கள், ஹுபெய் மாநிலத்து ஸுவெய்சியெ மாவட்டத்தின் லெகுதெங் என்னும் இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்திய பண்டைகாலக் கல்லறையான சென்ஹொயி கல்லறையைத் தோண்டியெடுத்தனர். பண்டைகாலத்திலான சூ பண்பாட்டுத் தனிச்சிறப்பு வாய்ந்த பியெசொங், பியெசிங், சின், சியொ, மேளம் உள்ளிட்ட 120க்கும் அதிகமான பண்டைக்கால இசைக்கருவிகளும் ஏராளமான தொல்பொருட்களும் கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டன. அதே வேளையில் தோண்டி யெடுக்கப் பட்ட சென்ஹொயி பியெசிங் கருவிகள் சுண்ணாம்புக்கல், வெண்கலம், மணிக்கல் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை. ஒலி தெளிவானது. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை, உடைந்துவிட்டதால் தட்டினாலும் ஒலி எழுப்புவதில்லை என்பது வருத்தத் தக்கது. 1980ல், ஹுபெய் மாநிலத்துப் பொருட்காட்சியகமும் வூஹாங் பௌதிகவியல் ஆய்வுக் கூடமும் ஒத்துழைத்து, சென்ஹொயி பியெசிங்கின் பிரதியைத் தயாரித்தன. அதன் ஒலி, அடிப்படையில் உண்மையான பியெசிங் போலவே இனிமையாக உள்ளது.

1983ல் ஹுபெய் மாநில இசை நடனக்குழு, ஒரு தொகுதி கல் பியெசிங் கருவியைத் தயாரித்தது. 1984ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்களில் சூசோவிலுள்ள தேசிய இன இசைக்கருவி உற்பத்தியாலையும் மணிக்கல் செதுக்கல் ஆலையும் சிவப்பு மஞ்சள் பழுப்பு நிறமுடைய மணிக்கற்களைக் கொண்டு ஒரு தொகுதி பியெசிங்கை தயாரித்தன.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040