• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தாள இசைக்கருவி]

பியெசுங்

பியெசுங் என்பது ஒரு வகை இசைக்கருவியின் பெயர் இது. சீனாவின் பண்டை காலத்தில் முக்கியமான தாள இசைக்கருவி. மணிக்கூடுகளில் ஒரு வகையாகும். இவ்விசைக்கருவியானது, பெரிய, சிறிய மணிக்கூடுகள் ஒழுங்கான முறையில் மரச் சட்டத்தில் தொங்கவிடப்பட்டு ஒரு குழுவாகவும் சில குழுக்களாகவும் அமைந்துள்ளன. ஒவ்வொரு மணிக்கூட்டின் ஒலி வேறுபடுகின்றது. கால வித்தியாசத்தினால், அதன் வடிவமும் வேறுபடுகின்றது. இருப்பினும், அதன் மேல் அழகான படம் வரையப்பட்டுல்ளது.

3500ஆம் ஆண்டுகளுக்கு முந்திய சாங் வமிச காலத்தில் சீனாவில் பியெசுங் தோன்றியது. காலம் போகப் போக, ஒரு தொகுதி பியெசுங்கின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பண்டை காலத்தில், பியெசுங் என்னும் இசைக்கருவி, முக்கியமாக அரண்மனையில் பயன்படுத்தப்பட்டது. மக்களிடையில் குழைவாகவே பயன்படுத்தப்பட்டது. போர், மன்னர் அமைச்சர்களைச் சந்திப்பது, வழிபாடு ஆகிய நடவடிக்கைகளின் போது, பியெசுங் எனும் இசைக்கருவி அடிக்கப்பட வேண்டும்.

சீனாவின் பண்டை காலத்தில், பியெசுங் எனும் இசைக்கருவி, மேல் நிலை சமுதாயத்தில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டது. அது, தகுநிலை மற்றும் அதிகாரத்தின் சின்னமாகும். அண்மை காலத்தில், சீனாவின் யுன்னான், சாங்சி, ஹுபெய் ஆகிய இடங்களில் தோண்டியெடுக்கப்பட்ட பண்டை கால மன்னர்களின் கல்லறைகளிலிருந்து தொன்மை வாய்ந்த பல பியெசுங் கருவிகள் தோண்டியெடுக்கப்பட்டன. இவற்றில், ஹுபெய் மாநிலத்து ஸுவெய்சியெ மாவட்டத்திலுள்ள சென்ஹொயி கல்லறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சென்ஹொயி பியெசுங், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பியெசுங் நுட்பமானது. அதன் மேல், இசை ராகத்துடன் தொடர்புடைய சுமார் 2800 எழுத்துக்களுடன் கூடிய கட்டுரை எழுதப்பட்டிருந்தது. பண்டை கால சீன இசைப் பண்பாட்டின் முன்னேறிய நிலையை இது கோடிட்டுக்காட்டுகின்றது. சென்ஹொயி பியெசுங், தற்போதைய சீனாவில் தோண்டியெடுக்கப்பட்ட நன்கு பாதுகாக்கப்பட்ட பெரிய அளவிலான அதிக எண்ணிக்கையிலான பியெசுங்களாகும். இது, மனித குலப் பண்பாட்டு வரலாற்றில் ஓர் அதிசயம் என பாராட்டப்பட்டுள்ளது. பியெசுங் எனும் இசைக்கருவியின் ஒலி தெளிவானது, இனிமையானது.

1982ல், வூஹாங் தேசிய இன இசைக்கருவி ஆலையும் வூஹாங் செம்மையான சாதன உற்பத்தி ஆலையும் சென்ஹொயி பியெசுங்கின் படி, பண்டை கால மாதிரியான ஒரு சேட் புதிய பியெசுங்கைத் தயாரித்தன. அரங்கேற்றம், நவீன இசை ஆகியவற்றுக்கேற்ப இவ்விசைக்கருவி சீர்திருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணிக்கு இரண்டு ஒலி எழுப்பலாம். அவை மூன்று வரிசைகளாகத் தொங்கவிடப்படும்.

சீனாவின் பண்டை கால கவிஞர் சியுயுவானின் மனதிலுள்ள வருத்தம் மற்றும் ஆத்திர உணர்வை இது வெளிப்படுத்தியுள்ளது.

1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040