• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[தாள இசைக்கருவி]

யாங்சின்

யாங்சின் என்பது சீனாவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒருவகை தாள இசைக்கருவியின் பெயர். அதன் ஒலி தெளிவு. அது தனிக்குரல் இசை, கூட்டுக்குரலிசை அல்லது இணைக்குரலிசைக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்படுகிறது. கூட்டிசை மற்றும் தேசிய இன இசைக்குழுக்களில் இது முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.

வரலாற்றுப் பதிவேட்டின் படி, மத்திய சகாப்தத்திற்கு முன், மத்திய கிழக்கிலுள்ள பாரசீகம் உள்ளிட்ட பண்டைய அரபு நாடுகளில் சாதலிசின் என்னும் ஒருவகை தாள இசைக்கருவி பரவலாக இருந்தது. மிங் வமிச காலத்தில் அதாவது 1368முதல் 1644 வரை, சீனாவுக்கும் மேற்காசியா, கிழக்காசியா ஆகியவற்றுக்குமிடையில் நெருக்கமான நட்புப் பரிமாற்றத்துடன், இவ்வகை இசைக்கருவி, பாரசீகக் குடா வழியாக சீனாவிற்குள் நுழைந்தது. துவக்கத்தில் குவாங்துங்கில் மட்டும் பரவியது. பின்னர் படிப்படியாக சீனாவில் பல்வேறு இடங்களில் பரவியுள்ளது. சீன நாட்டுப்புறக் கலைஞர்களின் சீர்திருத்தத்தினால், இவ்விசைக்கருவி, யாங்சின் எனப்படும் சீனாவின் தேசிய இன இசைக்கருவியாக மாறியுள்ளது.

யாங்சின் எனும் இசைக்கருவி, முக்கியமாக வெட்டுமரத்தால் தயாரிக்கப்பட்டது. அதன் இசையதிர்வு எழுப்பும் குடம் வண்ணத்துப்பூச்சி வடிவமுடையது. இதனால் வண்ணத்துப்பூச்சி இசைக்கருவி என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்விசைக்கருவியை இசைக்கும் போது, முதலில், இதை மரச் சட்டத்தில் வைத்துக்கொண்டு, சிறிய மூங்கில் கோல்களைக் கொண்டு, இரண்டு கைகளாலும் இசைக்கருவியின் நரம்பை அடிக்க வேண்டும்.

இவ்விசைக்கருவியை இசைக்கும் நுட்பம் அதிகம். கீழ் குரல் தாழ்ந்தது. மத்திம குரல் தெளிவானது. உச்ச குரல் பெரியது. மகிழ்ச்சிகரமான உணர்வை வெளிப்படுத்தும் வேகமான இசையை இசைப்பதற்கு இவ்விசைக்கருவி ஏற்றது.

யாங்சின் என்னும் இசைக்கருவி, சீனாவில் 400 ஆண்டுகளுக்கு மேலாக பரவிவந்துள்ளது. இதனிடையே, சீனாவின் இசைக்கருவித் தயாரிப்பாளர்கள் பல்வகை புதிய யாங்சின்களைத் தயாரித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, ஒலி மாறும் யாங்சின், ராகம் மாறும் யாங்சின், மின்னணு ஒலி யாங்சின் முதலியவை இதில் அடங்கும். மின்னணு ஒலி யாங்சின் குறிப்பிடத் தக்கது. இத்தகைய இசைக்கருவியை, இணைக்குரலிசையாகவும் தனிக்குரல் இசையாகவும் பயன்படுத்தலாம். இதனால், இவ்விசைக்கருவி தோன்றியது முதல், யாங்சின் இசைப்பவர்களால் பாராட்டப்பட்டுவருகின்றது.

சீனாவில் நீண்ட காலமாக இவ்விசைக்கருவியைத் தயாரிப்பது, இசைக்கும் நுட்பம், இசை அமைப்பது ஆகியவற்றில் தனிச்சிறப்புடன் வளற்ச்சி காணப்பட்டுள்ளது. இது மக்கள் விரும்பும் இசைக்கருவியாக மாறியுள்ளது.


1 2 3 4 5
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040