சீனர்களின் தேய்வர்கள் 2
ஒரு பௌத்த ஆலயத்தின் நுழைவாயிலில் காவல் வீரர்களை கொண்டிருப்பதைக சீனப் பௌத்தம் பெருமிதம் அடைகிறது. இது பௌத்தத்துக்கு ஒரு கண்ணியத்தைச் சேர்ப்பதாகக் கருதப்படுகின்றது.
தாவோ மதம் கூட இது போன்ற உருவங்களைக் கொண்டிருக்கிறது. தாவோ மதத்தில் நான்கு காவல் மாவீர்கள் உள்ளனர். இவர்கள் மக்கலுக்காக துஷ்ட தேவதைகளை நீக்குகின்றன. இந்த நான்கு மாவீரர்களில் மாவீரன் மா தியன்ஜுன் (குவாங் குவாங் தெய்வம் எனவும் அழைக்கப்படுகிறது.) மாவீரன் ஜாஒ குங்மிங்( அதிர்ஷ்டத் தெய்வம்)மாவீரன் குவான் யு (இவர் சீன வரலாற்றில் ஒரு பிரபலமான தளபதி)மற்றும் மாவீரன் வென் ச்சிஒங்(லெய் ச்சிஒங் எனவும் அழைக்கப்படுகிறது.) ஆக இருக்கிறார்கள். நான்கு மாவீரர்களும் வெள்ளை, கறுப்பு, சிவப்பு மற்றும் பச்சை நான்கு வித்தியாசமான நிறங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
படத்தில் மேல் மத்திய பகுதியில் இருப்பது மாவீரன் மா ஆகும். இப்படம் மர அச்சு மற்றும் கைச் சித்திரம் போன்றவற்றின் ஒரு சேர்மானமாக இருக்கின்றது.
1 2 3 4 5 6 7 8 9 10