• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனப் பண்டைகால நாவல்கள்]

பு சொன் லினும் அவருடைய கற்பனை கதை தொகுதியும்

  

18ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சீனாவில் மிகவும் புகழ் பெற்றது. சிறு கதை தொகுதியான "கற்பனை தேவி கதை தொகுதி". படைப்பாளர் பு சொன் லின் தனிசிறப்பான பாணியுடன் அதிக பிசாசு நரி பற்றிய கதைகளை உருவாக்கினார்.

1640ம் ஆண்டில் வணிக குடுபத்தில் பிறந்த அவர் 1715ம் ஆண்டில் மரணமடைந்தார். வாழ்நாள் முழுவதிலும் ஆசிரியராக பணி புரிந்தார். பல இலக்கிய படைப்புகளை அவர் எழுதினார். சிறு கதை தொகுதியான "கற்பனை தேவி கதை தொகுதி" அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பாகும்.

"கற்பனை தேவி கதை தொகுதியில்" 431 கதைகள் உண்டு. இவற்றில் 300 முதல் 200 வரையான சொற்கள் கொண்ட கதைகள் பல உண்டு. சிலவற்றில் ஆயிரம் சொற்கள் உள்ளன. நரியைக் கருப்பொருளாக கொண்டு தேவி பற்றிய கதைகள் வர்ணிக்கப்படுகின்றன. நிலப்பிரப்புத்துவ கட்டுப்பாட்டையும் தேர்வு முறையின் சீர்கேட்டையும் பிந்தங்கிய நிலபிரப்புத்துவ மரியாதையையும் அவை குறைகூறுகின்றன. தனிநபர் சுதந்திரத்தை அவர் கதைகளில் பிரச்சாரம் செய்கின்றார். நூல்களில் காதல் பற்றிய வர்ணழா வாசகளர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கதைகளில் மனிதருக்கும் பிசாசு நரிக்கும் தேவிகளுக்குமிடையிலான காதல் முக்கியமாக வர்ணிக்கப்படுகின்றது. இளம் பெண்களும் ஆண்களும் நிலபிரப்புத்துவ கட்டுப்பாட்டிலிருந்து விடுபடும் விருப்பத்தை இந்த கதைகள் எடுத்துக்காட்டுகின்றன.

"கற்பனை தேவி கதை தொகுதிக்குயில்" வர்ணிக்கப்பட்ட நரிகள் அழகான நல்ல குணம் உடைய இளம் நங்கை என்ற முறையில் காணப்படுகின்றன. குறிப்பாக "சியோர் சுய்" எனும் கதையில் சியோர் சுயின் தனி தன்மை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைசிறந்த இலக்கிய நுட்பத்தின் மூலம் வெளிப்படையான விவேகம் மிக்க மக்கள் நேசிக்கும் இளம் நங்கையின் தோற்றம் எழுத்தாளரால் வர்ணிக்கப்படுகின்றது. கதையின் முடிவில் சியோ சுய் முன்பு சிறிய நரியாக இருந்தவர். அதன் தாய் வாங்தைய்சான் வீட்டில் தஞ்சம் புகுந்தார். வாங் குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சியே சுய் மனித தோற்றத்தில் நடந்தார்.

நரி பற்றி பூ சுன் லின் பல கதைகளை எழுதினார். மனிதர்கள் போக்ஸை விருந்தினராக கருதி உபசரிக்கும் கதை பகுதியை வாசகர்கள் படிக்கும் போது நடைமுறை வாழ்க்கையில் பல்வகை துன்பங்களையும் இன்னல்களையும் மறந்து விடுவர்.

அழகான நரியை தவிர தீய நரியும் இந்த கதை தொகுதியில் வர்ணிக்கப்படுகின்றது. ஓவிய தோல் எனும் கதையில் நரி அழகான மனித தோற்றத்தில் மனிதரின் ரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்தது. கடைசியில் இந்த நரி மனிதரால் கொல்லப்பட்டது.

பொதுவாக கூறின், பூ சுன் லின் படைத்த "கற்பனை தேவி கதை தொகுதி"யில் நரி சொல்வது போல பெண்மனிகளின் கதையைச் சொல்கின்றார். மனிதருக்கு இல்லாத சிறந்த நாகரிகத்தை நரிகளிடம் எதிர்பார்த்தார்.

"கற்பனை தேவி கதை தொகுதிக்கு"சீனாவின் பண்பாட்டு வரலாற்றில் அழிக்க முடியாத படைப்புகளில் ஒன்றாகும். 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கதைத் தொகுதி 20க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. இவற்றில் பல பகுதிகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்டன. ஏராளமான மக்கள் இவற்றைக் காண விரும்புகின்றனர்.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040