• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனப் பண்டைகால நாவல்கள்]

"மூன்று நாடுகளின் வரலாறு"

சீனாவில் பண்டைகாலத்தில் புகழ் பெற்ற கலை படைப்பான "மூன்று நாடுகளின் வலராறு"ஒவ்வொரு குடும்பமும் அறிந்த ஒரு கதையாகும். சில நூறு ஆண்டுகள் கழிந்த பின் "மூன்று நாடுகின் வரலாறு"இல் வர்ணிக்கப்பட்ட போர்க் களங்கள், துடிப்பான மனிதர் தோற்றம், விவேத்துடன் போராடிய கதைகள் ஆகியவை சீன மக்களால் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் பல அறிஞர்கள் நீண்டகாலமாக இதை ஆராய்ந்து வருகின்றனர்.

லோ குவான் சுன் என்பவர் இந்த கதைபை எழுதினார். அவருக்கு சிறந்த கல்வி அடிப்படை உண்டு. குழந்தைகாலத்திலிருந்து படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். பொருளாதார வரலாற்று புத்தகங்களை நன்றாக படித்தார். அது கலை படைப்புக்கென சிறந்த அடிப்படையை உருவாக்கியது. அவர் வாழ்ந்த காலம் தேசிய இன முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் மிக மோசமாக இருந்த காலமாகும். மங்கோலிய மேலை குடும்பம் யுவான் ஆட்சிகாரத்தை நிறுவியது. ஹென் இனத்தின் மீது அராக்க ஆட்சியை நதத்தியது. இதன் விளைவாக மிக பல ஹென் இன மக்கள் எதிர்த்து நின்று பல்வேறு இடங்களில் கிளர்ச்சி படை உருவாக்கப்பட்டன. கிளர்ச்சியாளர்களை ஒன்றிணைந்து யுவான் படையை எதிர்த்துப் போராடினர்.

யுவான் வம்சத்தை தூக்கியெறிந்த பின் சீனாவை மீண்டும் ஆட்சிபுரிய முயன்றனர். இளம் வயதில் லோ குவான் சுன் கிளர்ச்சிப் படை ஒன்றில் சேர்ந்து பொது அதிகாரியாக பதவியேற்றார். அப்போது அவருக்கு அரசியல் ஆர்வம் மிகுந்திருந்தது. பின்னர், சு யுவான் சான் தலைமையிலான கிளர்ச்சி படை வெற்றி பெற்று மிங் வம்ச ஆட்சியை நிறுவினார். லோ குவான் சுனின் அரசியல் எதிர்பார்ப்பை இழந்த பின் கலை படைப்பில் ஈடுபட்டார்.

184ம் ஆண்டு முதல் 280ம் ஆண்டு வரையான நூறு ஆண்டு காலத்தின் சிக்கலான வரவாற்று கதையை மூன்று நாடுகின் வளர்ச்சி》இல் வர்ணிக்கப்பட்டன. பெருமளவிலான மூன்று நாடுகளின் வரலாறு, கதைகள் நாட்டுப்புற கதைகள் ஆகியவற்றை லோ குவான் சுன் கொண்டு அவருடைய அரசியல் ஆர்வம், விவசாயி கிளர்ச்சி படையிலான போர் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுடன் வெய், சூ, வூ ஆகிய மூன்று நாடுகளுக்கிடையிலான அரசியல் மற்றும் ராணுவ போராட்ட வரலாற்றை கதைபடுத்தினார்.

"மூன்று நாடுகள் வலராறு"கதையில் பல இலக்கிய அம்சங்கள் உள்ளது. மக்களின் ஆர்வத்தையும் அக்கறையையும் ஈர்க்கும் ராணுவ மற்றும் அரசியல் போராட்டம் பற்றி வர்ணிப்பதன் மூலம் பல்வகை இலக்கிய வழிமுறைகளுடன் தெளிவான தனித்தன்மை உடைய ஆட்களை உருவாக்கினார். கதையில் 400க்கும் அதிகமானோரில் தனி தன்மை வாய்ந்த மனிதர்களின் எண்ணிக்கை பத்துக்கு மேலாகும். கதையில் அதிகாரத்தை நன்றாக பயன்படுத்திய வெய் மன்னர் சோ ச்சோ, விவேகமான சூ நாட்டின் ஆலோசகர் சு கே லியான், மிக துணிவுமிக்க சூ நாட்டின் தளபதி சான் பிஃ, பித்தியாரியான வூ நாட்டின் தளபதி சோ யூ முதலியோர் பற்றிய பகுதி மக்களால் வரவேற்கப்பட்டன.

லோ குவான் சன் படைத்த "மூன்று நாடுகின் வலராறு" முக்கிய பன்பாட்டு மதிப்பு கொண்டுள்ளது. இது மட்டுமல்ல நிலபிரப்புதுவ சமூகத்தின் கலஞ்சிய நூலாக திகழ்கின்றது. அப்போதைய சமூகத்தின் பல்வேறு துறைகள் இந்த படைப்பில் வர்ணிக்கப்பட்டன. சீனாவில் மேன்மேலும் அதிகமான நிபுணர்களும் அறிஞர்களும் "மூன்று நாடுகின் வலராறு"இந்த படைப்பை ஆராய்ந்து வருகின்றனர். வரலாற்றுவியல், திறமைசாலி வியல், மன வியல், பிரச்சார வியல், சூழ்ச்சி வியல், நிர்வாக வியல், ராணுவ வியல், இலக்கிய வியல், தத்துவ வியல் ஆகியவற்றிலிருந்து இந்த படைப்பின் கல்வி மதிப்பையும் நடைமுறை முக்கியத்துவத்தையும் ஆராய்ந்து வருகின்றனர்.

"மூன்று நாடுகின் வலராறு"பல்வேறு நாடுகளின் மக்களால் வரவேற்கின்றது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகில் வெளியிடப்பட்டது. உண்மையான மக்கள் தன்மை வாய்ந்த தலைசிறந்த படைப்பாக இந்த "மூன்று நாடுகின் வரலாறு" அழைக்கப்படுகின்றது.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040