நவ சீனாவின் 55 ஆண்டு எனும் பொது அறிவுப் போட்டிக்கான முதல் கட்டுரை இதே—
தலைப்பு: சீனப் பொருளாதார வளர்ச்சி என்பதாகும்.
55 ஆண்டுகளுக்கு முன், நவ சீனாவின் கட்டுமானம், இன்னல் மிகுந்த நிலைமையில் துவங்கியது. நூறு ஆண்டுகள் நீடித்த ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் சூறையாடல், நீண்டகாலப் போர் ஆகியவற்றின் விளைவாக, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட போது, முழு நாட்டில், இடிபாடும் சீர் அழிந்த காட்சியும் காணப்பட்டன. பல்வேறு துறைகள் நிறுவப்பட வேண்டும். நாட்டின் தொழில் துறையின் அடிப்படையோ பலவீனமானது, வேளாண் விளைச்சல் குறைவு, பொருள் பற்றாக்குறை. இத்தகைய இன்னலான நிலைமையில் தான், நாட்டுக் கட்டுமானத்தை சீன மக்கள் துவக்கினர்.
1 2 3 4 5 6 7
|