
கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார அளவு இடைவிடாமல் விரிவடைவதுடன், சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு முறையும் மாறியுள்ளது. மூலப் பொருட்களை அளவுக்கு மீறிச் செலவழிக்கும் தொழில்களுக்கு, அல்லது சுற்றுச்சூழலுக்கு தூய்மை கேட்டை ஏற்படுத்தும் தொழில்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர வல்ல வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது பற்றி, சீன அரசு புள்ளி விபர பணியகத்தின் துணைத் தலைவர் சியூ சியாவ் ஹூவா கூறியதாவது—
"மூலதனமும் தொழில் நுட்பமும் செறிந்திருக்கும் தொழில் துறையானது, சீனப் பொருளாதார அதிகரிப்புக்கு மேலும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. மின்னணுத் தகவல் தொழில் துறை, வீட்டு மற்றும் நில உடைமை, மோட்டார் வாகன உற்பத்தி தொழில் துறை முதலியவை, சீனப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றுவிக்கும் முக்கிய ஆற்றலாகும்" என்றார் அவர்.
1 2 3 4 5 6 7
|