70ஆம் ஆண்டுகளின் இறுதியில் துவங்கிய பொருளாதார சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணி, சீனப் பொருளாதாரத்துக்கு முன்கண்டிராத உயிராற்றலை ஊட்டியது. புள்ளிவிபரங்களின்படி, 1978ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையான 25 ஆண்டுகளில், சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் சராசரி ஆண்டு அதிகரிப்பு விகிதம் 9 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.
பல ஆண்டுக்காலப் பொருளாதார அதிகரிப்பு, மக்களின் வாழ்க்கையை சீன அரசு மேம்படுத்துவதற்கு அடிப்படையை உருவாக்கித் தந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளில், உடை மற்றும் உணவு பற்றாக்குறைக்கு ஆளான 20 கோடி மக்கள், வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, சீன மக்கள் தொகை 130 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில், நபர் வாரி உள் நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு, முதன்முறையாக 1000 அமெரிக்க டாலரைத் தாண்டி சாதனை படைக்கப்பட்டது.
1 2 3 4 5 6 7
|