சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு, சர்வதேசப் பொருளாதார துறைப் பிரமுகரின் பாராட்டு கிடைத்தது. பொருளியல் துறையில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பேராசிரியர் லாரன்ஸ் கிளின்(Lawrence Klein) கூறியதாவது—
"நீங்கள் சீனாவுக்குச் சென்று, மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றத்தைப் பார்த்தால் போதும், சீனப் பொருளாதாரம் விரைவாக அதிகரித்து வருவது குறித்து, உங்களுக்கு ஐயமே ஏற்படாது" என்றார் அவர்.
முன்பு மூடப்பட்டுக் கிடந்த சீனப் பொருளாதாரம், வளர்ச்சிப் போக்கில் உலகப் பொருளாதாரத்துடன் இணையும் நிலை, நாளுக்கு நாள் ஆழமாகி வருகிறது. சீனப் பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் திறப்பு நிலை விரிவடைந்து வருகிறது. 2001ஆம் ஆண்டில், உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்தது. இப்போது, சுதந்திர வர்த்தக மண்டலம் பற்றி தென்கிழக்காசிய நாடுகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதே வேளையில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட, நாடுகள் மற்றும் பொருளாதார அமைப்புகளுடன் இரு தரப்பு அல்லது பல தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை சீனா ஆக்கப்பூர்வமாக வலுப்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் சுங்க வரியின் மொத்த நிலை இடைவிடாமல் குறைந்துள்ளது. சராசரி வரி விகிதம், உலக வர்த்தக அமைப்பில் சேர்வதற்கு முந்தைய 15.3 விழுக்காட்டிலிருந்து, தற்போது 10.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
1 2 3 4 5 6 7
|