2003ஆம் ஆண்டில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தக தொகைத் 80 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. உலக வர்த்தக தொகையில், அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பானி ஆகிய நாடுகளுக்கு அடுத்து, 4வது இடம் வகித்தது. சீனா ஈர்க்கும் அந்நிய முதலீட்டுத் தொகை, இவ்வாண்டு ஜூன் திங்கள் வரை, 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. 2003ஆம் ஆண்டில், சீனா, மிக அதிகமான அந்நிய முதலீட்டை ஈர்த்த நாடாக மாறியுள்ளது. அத்துடன், சீனாவின் இறக்குமதியும் வெளிநாடுகளிலான அதன் முதலீடும் அதிகரித்துள்ளன. தற்போது, உலகில் 3வது பெரிய இறக்குமதி நாடாகவும் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் 5வது பெரிய நாடாகவும் சீனா விளங்குகிறது.
சீனா தொடர்ந்து உலகத்துக்கு சந்தையைத் திறந்து விடுகிறது என்று, சீனத் தலைவர்கள் பலமுறை தெரிவித்துள்ளனர். அண்மையில், சர்வதேசப் பொருளாதாரக் கூட்டம் ஒன்றில், சீனத் துணைத் தலைமை அமைச்சர் வூ ஈ அம்மையார், கூறியதாவது—
"வெளிநாட்டுத் திறப்பு பணியை விரிவுபடுத்துவது என்பது, சீன அரசு நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கும் அடிப்படைக் கொள்கையாகும். திறப்பு நிலையை பன்முகங்களிலும் உயர்த்தி, சுங்க வரி சாரா நடவடிக்கையை நீக்கி, அந்நிய வணிகர் முதலீடு செய்யக் கூடிய துறையை சீனா விரிவுபடுத்தும்" என்றார் அவர்.
1 2 3 4 5 6 7
|