1979 வரை, அடிப்படையில், சோவியத் யூனியனை முன்மாதிரியாகக் கொண்டு, சீனா வளர்ச்சியுற்று வந்தது. அப்போது நடைமுறைக்கு வந்த பொருளாதார அமைப்பு முறையானது, திட்டமிட்ட அரசு பொருளாதார அமைப்பு முறையாகும். இக்காலகட்டத்தில், சீனா நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கை நிலை, ஓரளவு உயர்ந்துள்ளது. ஆனால், திட்டமிட்ட பொருளாதார மாதிரியின் குறைபாட்டினால், சீனப் பொருளாதாரத்தில் ஆழமான பிரச்சினைகள் நீங்கியபாடில்லை. 1970ஆம் ஆண்டுகளின் இறுதியில், சீனப் பொருளாதார வளர்ச்சி, பெரும் தடையை எதிர்நோக்கியது. எனவே, பொருளாதார அமைப்பு முறையை சீனத் தலைவர்கள் முற்றுமுழுதாக சீர்திருத்தலாயினர். அதாவது, திட்டமிட்ட பொருளாதாரத்தை சோஷலிசச் சந்தை பொருளாதார அமைப்பு முறையாக மாற்றினர்.
1 2 3 4 5 6 7
|