
கலை........சீனாவின் பல்வேறு துறைகள் கவனம் செலுத்திய சமூக காப்புறுதி தொடர்பான வரைவு சட்டம் கடந்த டிசம்பர் திங்களில் பரிசீலனைக்காக சட்டமியற்றல் அமைப்பிடம் வழங்கப்பட்டது.
தமிழன்பன்........இந்த வரைவு சட்டம் மூலம் எந்த மாதிரியான கட்டுக்கோப்பு நிறுவப்பட்டது.
கலை........இதன் மூலம் அடிப்படை சட்ட கட்டுக்கோப்பு அமைக்கப்பட்டது. அடிப்படை முதுமை காப்புறுதி முறைமை படிப்படியாக நாடளவில் சோதனைக்குட்படுத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அதன் மூலம் அம்முறமையின் பயன்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழன்பன்........எனக்கு புரிந்தது. இதன் மூலம் வேறு ஊர்களில் பணிபுரிந்தாலும் அந்த தொழிலாளரின் கவலை நீக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவில் எங்கு பணிபுரிந்தாலும் முதிய வயதில் வாழும் இடத்தில் காப்புறுதி பெற முடியும்.
கலை........ஆமாம்.
தமிழன்பன்........அப்படியிருந்தால் கலை இந்த வரைவு சட்டம் எந்த அளவில் சமூக காப்புறுதி கடப்பாட்டுக்கு பொறுப்பேற்கின்றது?
கலை........அடிப்படை மருத்துவ சிகிச்சை காப்பீடு, பணியின்போது காயமடைவது, வேலையின்மை, மகப்பேறு ஆகியவை இந்த சமூக காப்புறுதி துறையில் கையாளப்படுகின்றன.
1 2 3 4 5 6 7
|