தமிழன்பன்........இதன் மூலம் முதுமை காப்புறுதி தொகை படிப்படியாக நாடு அளவில் சேகரிக்கப்படும் வசதிகள் உருவாக்கப்படும்.
கலை........2009ம் ஆண்டின் இறுதியில் நாடு முழுவதிலும் அடிப்படை முதுமை காப்புறுதி தொகை மாநில நிலை என்ற முறையில் சேகரிக்கப்படும் என்று சீன அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது மாநிலத்தின் எப்பகுதியில் இருந்தாலும் முதுமை காப்புறு செலுத்தக் கூடிய நிலை உருவாகும்.
தமிழன்பன்........2012ம் ஆண்டு நாட்டின் எப்பகுதியில் இருந்து காப்புறுதி கட்டணம் செலுத்தலாம்.
கலை........ஆகவே சீனாவின் சமூக காப்புறுதி அமைப்பு முறை கொள்கை ரீதியான நடவடிக்கையிலிருந்து சட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று விமர்சன கட்டுரை கருத்து தெரிவித்தது.
தமிழன்பன்........வரைவு சட்டத்தில் இது தொடர்பான வேறு அமைப்பு முறைகள் சீர்திருத்தப்பட்டதா?
கலை........ஆமாம். அரசு நிலையில் அடிப்படை முதுமை காப்புறுதி தொகையை நிர்ணயிக்கும் அமைப்பு முறை வரைவு சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழன்பன்........அப்படியிருந்தால் விலைவாசியின் உயர்வின் படி அடிப்படை முதுமை காப்புறுதி சலுகை உரிய முறையில் உயர்த்தப்படும் அப்படிதானா?
கலை........ஆமாம். இவை தவிர, கிராமப்புறத்தில் வாழ்கின்ற மக்கள் சமூக காப்புறுதி துறையில் சேர்க்கப்படுவர். அதேவேளையில் சமூக காப்புறுதி துறைக்கான ஆதரவையும் அரசு வலுப்படுத்தியுள்ளது.
1 2 3 4 5 6 7
|