
தமிழன்பன்........இதை சமாளிப்பதற்காக சமூக காப்புறுதி வரைவு சட்டத்தில் புதிய விதி அதிகரிக்கப்பட்டதா?
கலை........ஆமாம். இது பற்றி முதலில் சீனத் தேசிய மக்கள் பேரவையின் சட்ட ஆணையத்தின் துணை தலைவர் ச்சான் பொ லிங் கூறியதாவது.
தமிழன்பன்........ காப்புறுதி பெற்ற தனிநபர் பணியின் காரணமாக வேளூருக்கு சென்று அங்கே வேலை செய்ய தொடங்கினால் அடிப்படை முதுமை காப்புறுதி அப்பணியோடு இணைத்து செயல்படுத்தப்படும். ஓய்வு பெறும் போது காப்புறுதி கட்டணம் செலுத்திய இடத்திலே அவர் முதுமை காப்புறுதிப் பெற்று அனுபவிக்கலாம் என்று வரைவு சட்டத்தில் திருத்தப்பட்டுள்ளது.
கலை........தற்போது சீனாவின் பெரும்பாலான இடங்களில் முதுமை காப்புறுதி நகர மற்றும் மாவட்ட நிலையில் உள்ளது. முதுமை காப்புறுதி அடிமட்ட நிலையில் தான் உள்ளது. நிதி மேலாண்மையும் பரவலாகியது. இணக்க ஆற்றலும் குறைவு.
தமிழன்பன்........ஆகவே, கடந்த சில ஆண்டுகளில் சமூக காப்புறுதியின் அடிப்படை நிதி திரட்டல் நிலையை உயர்த்துவது என்பது முன்னேற்ற போக்காக இருந்தது. அப்படித்தானே.
கலை........ஆமாம். புதிய வரைவு சட்டத்தில் புதிய விதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழன்பன்........விபரமாக குறிப்பிடுங்கள்.
கலை........அடிப்படை முதுமை காப்புறுதி கட்டணம் மாநில நிலையில் அதாவது மாநில அளவில் ஒட்டுமொத்தமாக திரட்டப்படும். ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைக்கப்படும். கணக்கீட்டு எண்ணிக்கையும் செலுத்தும் கட்டண விகிதமும் ஒட்டுமொத்த முறையில் கையாளப்படுகின்றது.
1 2 3 4 5 6 7
|