தமிழன்பன்........அப்படியிருந்தால் முதியோர், நோயாளிகள், பணிபுரியும் போது காயமடைவோர், வேலையற்றோர், மகபேறடைந்த பெண்கள் ஆகியோர் தேவையான பொருள் உதவிகள் பெறுவதற்கு சீன அரசு சட்டத்தின் படி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
கலை........ஆமாம். 91 விதிகள் அடங்கும் வரைவு சட்டம் உள்ளடகங்களை மேலும் முழுமையாக்கியுள்ளது. செயல்படும் தன்மையும் மேலும் வலிமையானது.
தமிழன்பன்........நீங்கள் அறிமுகப்படுத்தியதை வைத்து பார்த்தால் புதிய மாற்றங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டேன்.
கலை........ஆமாம்.
தமிழன்பன்........இன்னும் சற்று விபரமாக கூறலாமா?
கலை........உருப்படியான அமைப்பு முறையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பகுதி அடிப்படை முதுமை காப்புறுதி பணிபுரிந்த பின்னர் பிற இடங்களுக்கு சென்றாலும் முதுமை காப்புறுதி தொடர்ந்து செயல்படுவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழன்பன்........முன்பு அப்படி செயல்பட வில்லையா?
கலை........ஆமாம். முன்பு அடிப்படை முதுமை காப்புறுதி பெற்றவர் பணி காரணமாக பிற இடங்களுக்கு சென்றுவிட்டால் தாம் அனுபவிக்க வேண்டிய முதுமை காப்புறுதி இணைக்காபடாமல் இருந்தது.
1 2 3 4 5 6 7
|