 சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த போக்கில், முதலாவது சிறப்பு பொருளாதார பிரதேசமான சென்ச்சென் முக்கிய இடத்தை வகிக்கிறது. சென்ச்சென் கண்டுள்ள வெற்றிக்கு, முன்பே அந்நிய முதலீட்டை ஈர்ப்பது, தனியார் தொழில் நிறுவனங்களை வளர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தவிர, வெளியூர் மக்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சியில், வெளியூரிலிருந்து சென்ச்சென் நகருக்கு வந்து பணிபுரிந்துள்ள உயர் நிலை பொறியியலாளர் Zhang Jihe பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். அறிவிப்பாளர் வான்மதி.
1979ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில், வெளிநாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்ட சீனாவில் முதலாவது தொழில் துறை மண்டலமான She Kou தொழில் துறை மண்டலம் மணற்திட்டும் வறண்ட மலை பிரதேசத்தில் பிறந்தது. தரிசு நிலத்தை உழுது கனவை நனவாக்கவும் திறந்த பிரதேசத்தில் தங்களது திறமையைச் சோதிக்கவும் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் பலர் இங்கே வந்தனர்.
1 2 3 4 5 6 7
|