
"நான் சிந்தனை திறந்தவன். வளர்கின்ற நிலைமைக்கிணங்க செயல்பட விரும்புகின்றேன். 1983ஆம் ஆண்டில் தான் இங்கே வர விரும்பினேன். குடும்ப விவகாரங்களின் காரணமாக வர முடியவில்லை" என்றார் Zhang Jihe.
அப்போது 37 வயதான Zhang Jihe அவ்வளவு இளமையாக இல்லை. ஆனால் தொழில் நடத்தும் உற்சாகம் நிறைந்த அவர் பலரைப் போல் அச்சிறப்பு பிரதேசத்தின் மீது ஆர்வம் கொண்டார். அப்போது சீனாவின் மத்திய பகுதியிலுள்ள வூ ஹான் நகரில் வேலை செய்த அவர் அமைதியான வாழ்க்கை நடத்தினார். திருமணமாகிய அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு, பரிச்சயம் இல்லாத இடத்துக்கு ஏன் செல்ல வேண்டும் என கருதியதால், அவரது மனைவி She Kou செல்ல எதிர்ப்பைத் தெரிவித்தார்.
1 2 3 4 5 6 7
|