
அவர் தொழில் நுட்பப் பணியாளர்களுக்கு தலைமை தாங்கி வேலை செய்வதோடு, பணித் திட்டம் தீட்டினார். ஓய்வு நேரத்தில் தொழில் நுட்பம் பற்றிய தரவுகளை எழுதுவது, இளைஞருக்கு பயிற்சி அளிப்பது ஆகியவற்றிலும் Zhang Jihe ஈடுபட்டார். அவரது வருமானம் பெரிதும் அதிகரித்துள்ளது. 1984ஆம் ஆண்டிலேயே, சென்ச்சென் நகரவாசிகளின் நபர் வாரி வாழ்க்கை செலவு நாட்டின் சராசரியான இத்தொகையை போல் 2 மடங்காகியுள்ளது.
1988ஆம் ஆண்டு Zhang Jiheவின் மனைவி வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின், சென்ச்சென் நகருக்கு வந்தார். அந்நகரின் வளர்ச்சி வேகத்தை நேரில் கண்டு, அவரது எண்ணம் மாறியுள்ளது. அவர் கூறியதாவது—
"1994ஆம் ஆண்டில் இங்கே வந்து கணவரைப் பார்த்த போது, She Kouவில் வீடுகள் மிகக் குறைவு. சென்ற இடங்களிலும் புல் வளர்ந்து இருந்தது. தற்போது எங்கும் உயரமான கட்டிடங்கள் காணப்படுகின்றன. உள்பிரதேசத்தில் வீடு ஒன்றை கட்டியமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இங்கே கட்டுமானத்தின் வேகம் அதிகம். பணிப்பயனும் உயர்வு" என்றார் அவர்.
1 2 3 4 5 6 7
|