
1980ஆம் ஆண்டில் She Kou துறைமுகத்தின் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த, ஊக்கத் தொகை முறைமையை சென்ச்சென் நகரம் செயல்படுத்தியது. வூ ஹான் நகரில் அதிகமாகவோ குறைவாகவோ வேலை செய்தாலும் ஒரே வருமானத்தையே பெற்ற Zhang Jihe அங்கே தொழில் நடத்தும் ஆர்வம் அதனால் உருவாக்கப்பட்டது. அவர் கூறியதாவது—
"கட்டுமானப் பணி தொடங்கிய போது, நமது நாட்டில் ஊக்கத் தொகை முறைமை இல்லை. மலைப் பிரதேசத்தில் சாலையைக் கட்டியமைக்கும் பணியில், ஊக்கத் தொகை இல்லாத போது, ஓட்டுநர் ஒருவர் ஓரிரவில் 50 முறை கற்களை ஏற்றிச் செல்வார். ஆனால் ஊக்கத் தொகை அமைப்பு முறை அமுலாக்கப்பட்டால் அவர் அதிகமாகவும் விரைவாகவும் 100 முறை கற்களை ஏற்றிச் செல்ல முயல்வார்" என்றார் அவர்.
1 2 3 4 5 6 7
|