
கட்டுமானப் பணியை விரைவுபடுத்த, She Kou நிர்வாகக் கமிட்டியின் அப்போதைய தலைவர் Yuan Geng, நேரம் பணமாகவும் பயன் உயிராகவும் இருக்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்தார். மனித வளப் பயன்பாடு, ஊதியம், வசிப்பிடம், சமூகக் காப்புறுதி, திட்டப்பணிகளை ஏலம் விடும் முறை, தொழில் நிறுவனத்தின் பங்கு முதலீட்டு முறை உள்ளிட்ட துறைகளில் She Kou தொழில் துறை மண்டலம் துணிவுடன் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது. இங்கே வாய்ப்புகள் மேலும் அதிகமாகவும், நியாயமான போட்டி மேலும் வரவேற்கப்படுவதையும் இது காட்டுகிறது.
10 ஆண்டுகள் கடந்து விட்ட பின், அதாவது 1993ஆம் ஆண்டில், 47 வயதான உயர் நிலை தொழில் நுட்பப் பணியாளர் Zhang Jihe இறுதியில் வாய்ப்பு பெற்றார். உயர் நிலை தொழில் நுட்ப மற்றும் நிர்வாக திறமைசாலிகள் சென்ச்சென் நகருக்கு மிகவும் தேவைப்பட்டதே அதற்கு காரணமாகும்.
1 2 3 4 5 6 7
|