
மாற்றங்கள் கட்டுமான வசதிகளிலும் மட்டுமல்ல, சமூகச் சேவையிலும் வசிப்பிட சூழ்நிலையிலும் காணப்படுகின்றன. இது பற்றி Zhang Jiheவின் மனைவி கூறியதாவது—
"உள்பிரதேசங்களில் அலுவல்கள் மெதுவாக கையாளப்படுகின்றன. ஆனால் இங்குள்ள வேகம் உண்மையாகவே பரவாயில்லை. இங்குள்ள காலநிலையும் சூழ்நிலையும் நன்றாக உள்ளன. நகர திட்ட வரைவும் நன்றாக உள்ளது" என்றார் அவர்.
சுமார் 30 ஆண்டுகால வளர்ச்சி மூலம், சென்ச்சென் நகராட்சியின் அடிப்படை வசதிகள் பூர்வாங்க ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளன. நகரத்தின் சுற்றுச்சூழல் அழகாக உள்ளது. பசுமைமயமாக்க பரப்பின் விகிதம் உயர்ந்துள்ளது. இது பற்றி Zhang Jihe தம்பதியர் மனநிறைவு அடைந்துள்ளனர். Zhang Jihe போன்ற வெளியூர் மக்கள் சென்ச்சென் நகரின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தீர்க்கமான பங்காற்றியுள்ளனர் என கூறலாம். 1 2 3 4 5 6 7
|