
1980ஆம் ஆண்டுகளில் சென்ச்சென் தொழில் துறைக்கு தொழிலாளர் பெருமளவில் தேவைப்பட்டனர். Zhang Jihe உரிய தருணத்தில் சென்ச்சென் நகருக்கு வந்தார். 1990ஆம் ஆண்டுகளில், அந்நகரின் புதிய உயர் தொழில் நுட்பத் துறை வளரத் துவங்கியது. 1979ஆம் ஆண்டில் சென்ச்சென் நகரம் நிறுவப்பட்ட தொடக்கத்தில், இரண்டு பொறியியலாளர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது Nan Shan பகுதியிலுள்ள புதிய உயர் தொழில் நுட்ப மண்டலத்திலேயே 50 ஆயிரம் உயர் அறிவியல் தொழில் நுட்பத் திறமைசாலிகள் உள்ளனர். அவர்களில் 2000க்கு அதிகமானோர் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.
சென்ச்சென் நகருக்கு வந்தது சரியானது என Zhang Jihe கருதுகிறார். அவர் கூறியதாவது—
"சென்ச்சென் நகருக்கு வந்த பின், சிந்தனை ரீதியான மாற்றம் விரைவில் ஏற்பட்டது. சென்ச்சென் சிறப்பு பிரதேசமாகும். நேரம் பணமாகவும் பயனாகவும் இருக்கிறது" என்றார் அவர்.
1 2 3 4 5 6 7
|