
Doilungdeqen மாவட்டத்தின் Neqoin நகர், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவுக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு காய்கறி மற்றும் மலர் கூடாரங்கள் வரிசையாக காணப்படுகின்றன. முன்பு, இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள், மலை பார்லி பயிர் பயிரிட்டனர். 2004ஆம் ஆண்டு, லாசா நகரின் சந்தையில், காய்கறி மற்றும் மலருக்கான தேவைக்கிணங்க, அவைகளை பயிரிட்டு தொழிலை வளர்ப்பதன் மூலம், உள்ளூர் திபெத் இன விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதென Neqoin நகர அரசு தீர்மானித்தது. அதனால் இச்சங்கம் நிறுவப்பட்டது. உள்ளூர் அரசு, பயிரிடுதல் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களைத் தெரிவு செய்து, அவர்களை இச்சங்கத்தில் சேர்த்தது. திபெத் இன விவசாயிகளுக்கு பயிரிடும் நுட்பத்தை அவர்கள் கற்றுக்கொடுகின்றனர். தவிர, இந்த விவசாயிகள் பயிரிடும் காய்கறி மற்றும் மலர்களை விற்பனை செய்ய அவர்கள் உதவி செய்கின்றனர். இச்சங்கத்தின் விற்பனை பகுதிப் பொறுப்பாளர் Zhu Jin Shan கூறியதாவது:
"இச்சங்கம் நிறுவப்பட்ட துவக்கத்தில், விவசாயிகள் இச்சங்கத்தில் சேர விரும்பவில்லை. பின்னர், மாவட்ட அரசின் தொடர்புடைய பொறுப்பாளர்கள், இச்சங்கத்தில் சேருமாறு விவசாயக் குடும்பங்களை அணிதிரட்டினர். அப்போது உற்சாகம் மிக்க 11 விவசாயக் குடும்பங்கள் இச்சங்கத்தில் சேர்ந்தன. பயிற்சிகள் மூலம் காய்கறிகள் பயிரிடும் நுட்பத்தை விவசாயிகள் கற்று தேர்ந்தனர்"என்றார், அவர்.
1 2 3 4 5 6 7
|