
திபெத் இன பெண் Drolkarக்கு 40 வயதுக்கு மேலாகிறது. அவருடைய குழந்தை பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றார். ஏழை ஆனதால், குழந்தையின் கல்விக் கட்டணத்தை செலுத்த, பிறரிடமிருந்து அவர் அடிக்கடி கடன் வாங்க வேண்டியிருந்தது. கூடார முறையில் காய்கறி பயிரிட்டு வருமானத்தை அதிகரிக்க முடியும் என்று கேள்விப்பட்டு, முயன்று பார்ப்போம் என்ற மனநிலையுடன், அவர் இச்சங்கத்தில் சேர்ந்தார். அவர் கூறியதாவது:
"தற்போது காய்கறி பயிரிடுவதன் மூலம் எனது வருமானம் அதிகரித்துள்ளது. குழந்தையின் கல்விக் கட்டணத்தை வழங்குவதற்கு இனிமேல் கவலைபட போவதில்லை. தற்போது எனக்கு ஒரு கூடாரம் மட்டும் உண்டு. தக்காளி மற்றும் பச்சை மிளகாயைப் பயிரிடுகின்றேன். எதிர்காலத்தில் மேலும் சில கூடாரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார், அவர்.
புள்ளி விபரங்களின் படி, ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் ஆண்டுக்கு சராசரியாக 8500 யுவான் வருமானம் அதிகமாக பெறுவதாக தெரிகிறது. இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் புதிய வீடுகளில் குடிபெயர்ந்துள்ளன.
1 2 3 4 5 6 7
|