
கடந்த மூன்று ஆண்டுகால வளர்ச்சி மூலம், காய்கறிகள், மலர்கள், கால்நடைகள், வீ்ட்டு வளர்ப்பு பறவைகள் ஆகியவை வளர்க்கும் உத்திகளுக்கான பயிற்சி மையமாக இச்சங்கம் மாறியுள்ளது. இச்சங்கத்தின் காய்கறி தோட்டத்தில், ஆண்டுக்கு 14 இலட்சம் கிலோ காய்கறிகள் விளைகின்றன. திபெத் தன்னாட்சி பிரதேசத்தில், சுற்றுச்சூழலால் மாசுபடாத காய்கறி தோட்டமாக இது மாறியுள்ளது. இச்சங்கத்தின் விற்பனை பகுதிப் பொறுப்பாளர் Zhu Jin Shan கூறியதாவது:

"மாசுபடாத காய்கறிகள் எங்கள் தோட்டத்தில் முக்கியமாக பயிரிடப்படுகின்றன. தற்போது, உள்ளூர் பூசணி தக்காளி, பச்சை மிளகாய் ஆகிய மூன்று வகைகள், சீன வேளாண் துறை அமைச்சகத்தால் பசுமையான காய்கறிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன" என்றார், அவர்.
நேயர்கள் இது வரை இன்றைய "Neqoin நகரின் காய்கறி மற்றும் மலர் விற்பனை சங்கம்" பற்றிய நிகழ்ச்சி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய "சீன சமூக வாழ்வு" நிகழ்ச்சி நிறைவுற்றது. 1 2 3 4 5 6 7
|