
தற்போது இச்சங்கத்தில் 105 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் Doilungdeqen மாவட்ட மற்றும் Neqoin நகரின் அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்களும், உள்ளூர் திபெத் இன விவசாயிகளும் இடம்பெறுகின்றனர். இச்சங்கம் நிறுவப்பட்ட துவக்கத்தில் 11 கூடாரங்களை உருவாக்கி, திபெத் இன விவசாயிகளுக்கு ஒப்பந்தம் மூலம் வழங்கி, அவர்களுக்கு காய்கறி பயிரிடும் நுட்பம் பற்றிய பயிற்சிகளை அளித்தது.
Lotsulவின் குடும்பம், கூடாரத்தில் ஒப்பந்தம் மூலம் பயிரிட முதன்முறையாக பொறுப்பு ஏற்ற விவசாயக் குடும்பங்களில் ஒன்றாகும். அவர் கூறியதாவது:
"பெய்சிங்கிலிருந்து தொழில் நுட்ப வல்லுநர் ஒருவரை இச்சங்கம் அமர்த்தியது. சுமார் 3 ஆண்டுகளாக, கூடார முறையில் அவரிடமிருந்து பயிரிடுதல் நுட்பத்தைக் கற்றுக்கொண்டேன்" என்றார், அவர்.
1 2 3 4 5 6 7
|