• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-01 14:50:45    
60 ஆண்டுகளின் அனுபவங்கள்

cri
A:வணக்கம் நேயர்களே.
B:இப்போது நவ சீனாவின் வைரவிழா சிறப்பு நிகழ்ச்சி நேரம். அறிவிப்பாளற்கள் கிளீடஸ், கலையரசி, வான்மதி, கலைமகள், தமிழன்பன், தேன்மனி.
A:1949ம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாள் சீன மக்களின் தலைவிதியை மாற்றிய நாளாகும்.
B: சீனாவில் வாழ்கின்ற பல்வேறு தேசிய இனங்களும் மக்களும் 60 ஆண்டுகளுக்கு முன்பு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு வளர்ந்தற்கு சாட்சியாக உள்ளனர்.
A:கடந்த 60 ஆண்டுகளில் சீனாவில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
B:ஆமாம். இன்றைய நிகழ்ச்சியில் மூத்த குடி மக்கள் Li MingCai, Lin Li இருவரது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் சீனாவில் சாதாரண குடும்பங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் நாட்டின் மாபெரும் மாற்றங்களை வெளிப்படுத்தும் கதைகளைக் கேட்டுக் மகிழுங்கள்.
A:இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் "புதிதாக நிறந்த குடியரசு","உற்சாகம் நிறைந்த நாட்கள்","விழிக்கும் முன் தோன்றிய ஒளி","உலகத்தை அரவணைப்போம்"ஆகிய நான்கு பகுதிகளின் மூலம் சீன மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் 60 ஆண்டுகாலத்திலான சீனாவின் மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன.
B:முதலில் புதிதாக பிறந்த குடியரசு என்ற பகுதியைக் கேளுங்கள்.
A:இந்த பகுதியில் லீமின்சாய் மற்றும் லீங்லி போன்ற எளிய மக்கள் எமது நிகழ்ச்சியில் அறிமுகமாகின்றனர்.
1949ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது என்று அரசு தலைவர் மாசேதுங் தியன் ஆன் மன் கோபுரத்தில் அறிவித்தார். அப்போது சீன விடுதலைப் படையினர் பெய்ஜிங் நகரத்துக்குள் நுழைந்த காட்சி இவ்வாண்டு 71 வயதாகும் முதியோர் Li Mingcaiயின் நினைவில் இன்னமும் இருக்கிறது.
"சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட நாள் கோலாகலமான நாளாகும். ராணுவ அணி வகுப்பு, ராணுவ நுட்பங்களின் காட்சி ஆகியவை சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் வகையில் நடைபெற்றன" என்று Li Mingcai கூறினார்.
நவ சீனா நிறுவப்படும் முன், சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகள் நில உடைமையாளர்களின் வயல்களை வாடகைக்கு எடுத்து பயிரிடுவதன் மூலம் வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. அவர்களது பெரும்பாலான அறுவடையை நில உடைமையாளருக்கு சமர்பிக்க வேண்டும். Li Mingcaiயின் குடும்பமும் இப்படித் தான் வாழ்க்கை நடத்தியது.
"அக்காலத்தில் சில வேளைகளில் உண்ண உணவு இருக்காது. என் தந்தை நீண்டகால உழைப்பாளராக தனது முதலாளியிடம் உழைத்தார். அப்போது வீடு இல்லை. பந்தல் ஒன்றை அமைத்து, அமர்ந்த வண்ணம் தூங்கினோம்" என்று அவர் கூறினார்.
நவ சீனா நிறுவப்பட்ட பின், Li Mingcaiயின் குடும்பத்தில் வாழ்க்கையின் நம்பிக்கைச் சுடர் ஏற்றப்பட்டது. 1950ஆம் ஆண்டின் குளிர்காலம் முதல் 1953ஆம் ஆண்டின் வசந்தகாலம் வரை, வரலாற்றில் மிகப் பெருமளவிலான நில உடைமைச் சீர்திருத்தம் சீனாவில் மேற்கொள்ளப்பட்டது. நிலம் இல்லாத அல்லது குறைவான நிலம் கொண்ட 30 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகள் 4 கோடியே 60 லட்சம் ஹெக்டர் நிலத்தையும் இதர உற்பத்திப் பொருட்களையும் இலவசமாக பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் நில உடைமையாளருக்கு வழங்கப்பட வேண்டிய 3500 கோடி கிலோகிராமுக்கு மேற்பட்ட தானியமும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தனது குடும்பத்துக்கு சுமார் 0.3 ஹெக்டர் நிலமும் பெரிய மாடு ஒன்றும் வழங்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் Li Mingcai நினைவு கூர்ந்தார்.
1 2 3 4 5 6 7 8