1958ஆம் ஆண்டு, நீர் பாசனம் மற்றும் வெள்ளப்பெருக்கு வெளியேற்றத்துக்காக, அப்போதைய பெய்ஜிங்கின் Huai Rou மாவட்டம் 10 கோடி கன மீட்டர் நீரை சேமிக்கக் கூடிய நீர் தேக்கத்தை நிறுவத் தொடங்கியது. அக்கட்டுமானத்தில் Li Mingcai பங்கெடுத்தார். பெரிய ரக கருவிகள் ஏதும் இல்லாத நிலையில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைகளால் தோண்டி, சிறிய வண்டிகளால் 20 லட்சம் கன மீட்டர் கல் மண் மற்றும் கற்காரையை ஏற்றிச் சென்றனர். "அப்போது உற்சாகமான சூழழ் நிலவியது. எங்கள் சொந்த ஆற்றலை முழுமையாக பயன்படுத்தினோம். இரவும் பகலும் முழுமூச்சுடன் போராடினோம். கட்டுமான இடத்தில் ஒலிபரப்பு மூலம் எங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது" என்று Li Mingcai கூறினார். 1954ஆம் ஆண்டு Li Mingcai மற்றும் சகாக்கள் தங்களுக்கு வினியோகிக்கப்பட்ட வயலில் மகிழ்ச்சியுடன் உழைத்த போது, பெய்ஜிங் மாநகரில் வாழ்ந்த Lin Li பள்ளியில் சேர்ந்தார். Lin Liயின் தாய் அப்போது இருப்புப் பாதை அமைச்சகத்தில் வேலை செய்தார். வூ ஹான் யாங்ச்சி ஆற்றுப் பாலம் உள்ளிட்ட முன்னாள் சோவியத் யூனியனின் உதவியுடன் கட்டியமைக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கான வெளிநாட்டுத் தொடர்புப் பணிக்கு அவர் பொறுப்பேற்றார். பல்வேறு இன்னல்களைச் சந்தித்த போதிலும், சீன மக்கள் மிகவும் துணிச்சல் மற்றும் மனஉறுதியோடு, உலகின் கவனத்தை ஈர்க்கும் கட்டுமான சாதனைகளை நிறைவேற்றினர். நவ சீனா நிறுவப்படும் முன் சீனாவில் கனரகத் தொழிற்துறை வெற்றிடமாக இருந்தது. முதல் 5 ஆண்டுகால திட்டம் நடைமுறைக்கு வந்த சில ஆண்டுகளுக்குள், கனரகத் தொழிற்துறை நிறுவனங்கள் அடுத்தடுத்து நிறுவப்பட்டன. நெடுஞ்சாலைகள், இருப்புப் பாதைகள், பாலங்கள் ஆகியவை சீனாவில் குறுக்கும் நெடுக்குமாக காணப்பட்டன. நவ சீனாவின் முதல் வாகனம், முதல் விமானம் முதல் யாங்ச்சி ஆற்று பாலம் உள்ளிட்ட ஒவ்வொரு முன்னேற்ற அடியும், அப்போது சீன மக்களுக்கு ஊக்கத்தையும் பெருமையையும் தந்துள்ளது. B:இன்றைய நிகழ்ச்சியில் மூத்த குடிமக்கள் Li MingCai, Lin Li இருவரது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் சீனாவில் சாதாரண குடும்பங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் நாட்டின் மாபெரும் மாற்றங்கள் உறுதிப்படுத்தப்படும் காட்சியைக் தொடர்ந்து வழங்குகின்றோம். 1 2 3 4 5 6 7 8
|