A:சீனாவின் தலைமைச் சிற்பி தென்சியௌபிங் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளுமாறு நாட்டுக்கு வேண்டுகோள் விடுத்த பின் சீன மக்களின் வாழ்க்கை மிக விரைவாக வளரும் காலகட்டத்தில் நுழைந்தது. B:Li MingCai, மற்றும் Lin Li இருவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கேட்டு மகிழுங்கள். 1982ம் ஆண்டு Lin Li பீகிங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று சீனப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழுள்ள சீன தொலைதூர கடற்போக்குவரத்துத் தலைமை நிறுவனத்தில் பணிபுரிய நியமிக்கப்பட்டார். இழப்புத் தொகை நஷ்ட ஈடு மற்றும் கடல் விபத்துக்கான காப்பீடு அலுவலுக்கு அவர் முக்கியமாக பொறுப்பேற்றார். 1984ம் ஆண்டு பெப்ரவரி திங்கள் சீன தலைவர் தென்சியௌபிங் குவாங்துங், பூஃசியென் ஆகிய மாநிலங்களைப் பார்வையிட்ட போது அங்கே பொருளாதாரச் சிறப்புப் பிரதேசங்களை நிறுவுவதென்ற கொள்கையை உறுதிப்படுத்தினார். அத்துடன் வெளிநாட்டுக்குத் திறந்து வைக்கப்படும் நகரங்களை அதிகரிக்க அவர் முன்மொழிந்தார். ஏப்ரல் திங்கள் 14 கடலோர நகரங்கள் வெளிநாடுகளுக்கு திறந்து வைக்கப்பட்டன. வாரிய ஊழியர்கள், அறிஞர்கள் போன்றவர்கள் அடுத்தடுத்து வணிகத் துறையில் ஈடுபடத் துவங்கினர். 1986ம் ஆண்டில் லீங்லி துணிவுடன் தமது அரசு சார் பணியை கைவிட்டு மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்குச் சென்றார். 1986ம் ஆண்டில் எனக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் பதவி விலகி மேற்படிப்புக்காக ஜப்பானுக்கு சென்றேன் என்றார் அவர். ஜப்பானில் படித்த போது பெற்ற அனுபவங்கள் அவருடைய பார்வையை விரிவாக்கின. 2வது உலகப் போருக்கு பின் ஜப்பானிய சமூகம் விரைவாக வளர்ந்துள்ளதை அவர் அங்கே முழுமையாக உணர்ந்தார். 1990ம் ஆண்டு அவர் படிப்பை முடித்து நாடு திரும்பினார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் Lin Li சொந்தமாக ஒரு தொழில் நிறுவனத்தை துவக்கினார். தொழில் நடத்துவதன் மூலம் சீனாவி்ன் முதலீட்டுச் சூழ்நிலையை அவர் படிப்படியாக உணர்ந்துள்ளார். காலப்போக்கில் செல்வந்தவர்களில் ஒருவராக Lin Li மாறினார். இந்த பெருமை சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுக் திறப்பை முன்வைத்த தலைமை சிற்பி தென்சியௌபிங்கிற்கே சேர வேண்டும். 1992ம் ஆண்டு சீனாவின் தென் பகுதியில் பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற வேண்டுகோளை தென்சியௌபிங் விடுத்தார். சோஷியலிசம், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பொருளாதாரத்தை வளர்ப்பது, மக்கள் வாழ்க்கை மேம்படுத்துவது ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் சீனா எந்த வெற்றிகளையும் பெறாது. இதை உறுதிப்படுத்துவதில் தயக்கமில்லை. தொடர்ந்து வளர்ந்து மக்களின் வாழ்க்கை நிலையை தொடர்ந்து உயர்த்தச் செய்தால்தான் மக்கள் நம் மீது நம்பிக்கைக் கொள்வர். நமக்கு ஆதரவளிப்பர் என்று தென்சியௌபிங் கூறினார். 1 2 3 4 5 6 7 8
|