• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-01 14:50:45    
60 ஆண்டுகளின் அனுபவங்கள்

cri

A:இந்த பகுதியின் தலைப்பு "உணர்ச்சியூட்டும் நாட்கள்" என்பதாகும்.
B:இதன் மூலம் அப்போதைய சீனாவின் உண்மைச் சூழ்நிலை விவரிக்கப்படுகின்றது. கேட்கலாமா?
இளம் நவ சீனாவுக்கு, வளர்ச்சி ரீதியிலான அனுபவங்கள் குறைவு. பணியில் உற்சாகம் நிறைந்த மக்கள், நாட்டின் வறிய நிலைமையை உடனடியாக மாற்ற ஆவர்ந்துள்ளனர். நகரங்களில் இரும்புருக்கு துறை பெரிதும் வளர்ச்சியடைந்திருந்தது. தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் இரைச்சல் ஒலித்துக்கொண்டிருந்தது.
1958ஆம் ஆண்டின் இறுதியில், நீர்த்தேக்கத்தைக் கட்டியமைக்கும் பணியை முடித்த பின், பெய்ஜிங்கில் உள்ள தொழிற்சாலையில் பணி புரிய ஆள் அமர்த்துவது பற்றிய செய்தியைக் கேட்டு, Li Ming Cai உடனடியாக விண்ணப்பித்தார். அவர் பெய்ஜிங் இரண்டாவது எந்திரக் கருவித் தொழிற்சாலையில் பயிற்சிப்பணியாளராக பணி புரியத் துவங்கினார். Li Ming Cai கூறியதாவது:
"அப்போது மகிழ்ச்சியாக இருந்தேன். சில நாட்களில் ஓய்வு கிடைத்தது. இன்பமடைந்தேன். திங்களுக்கு உணவுக்கென 12 யுவான் உதவித்தொகையைப் பெற்றேன். நல்ல உணவுகளைச் சாப்பிட முடிந்தது" என்று அவர் கூறினார்.
நகரில் ஓராண்டு பணி புரிந்த பின், Li Ming Cai சொந்த ஊர் திரும்பினார். அப்போதைய கிராமப்புறங்களில், சுறுசுறுப்பான உழைப்பைச் சார்ந்து, சிலர் செல்வமடைந்திருந்தனர். ஆனால், குடும்பத்தில் உழைப்பாற்றல் பற்றாக்குறை, இயற்கைச் சீற்றம், நோய்கள் ஆகியவற்றின் காரணமாக, சிலர் வறுமை நிலையில் சிக்கியிருந்தனர். இதற்கிடையில், தொழில்மயமாக்கத்தால் நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்ததால், தானியம் மீதான தேவையும் பெரிதும் அதிகரித்தது.
தானியம் உள்ளிட்ட வேளாண் மற்றும் வேளாண் சார் பொருட்களின் அளவு படிப்படியாக குறைந்து விட்டது. 1959ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை சீனாவில் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்தன. கிராமப்புற வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், Li Ming Cai நகரங்களுக்குச் சென்று வேலைவாய்ப்பைத் தேட முயலவில்லை.
Li Ming Caiஐ போல், மூன்று ஆண்டுகளாக நீடித்த இயற்கைச் சீற்றம் நகரவாசி Lin Liவின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. தானிய விளைச்சல் தொடர்ந்து குறைந்ததால், பட்டினிப் பிரச்சினை சீனாவில் பரவியது. தலைநகர் பெய்சிங்கிலும் கூட, தானியப் பற்றாக்குறை தோன்றியது. பெய்சிங் மாநகர அரசின் விதியின் படி, திங்கள்தோறும் இந்நகரில் வசிப்பவர்களாக பதிவு செய்யப்பட்ட மக்களுக்கு உணவு பெறும் சீட்டு வினியோகிக்கப்பட்டது. வயதுக்கேற்ப, மக்கள் தானியத்தை வாங்கக்கூடிய அளவு வேறுப்பட்டது. Lin Li கூறியதாவது:
"அப்போது பல்வகை சீட்டுகள் வினியோகிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக துணி, கோதுமை, அரிசி, உணவு எண்ணெய், உணவு தானியங்கள் முதலியவற்றுக்கான சலுகைச்சீட்டுகள். ஒவ்வொருக்கும் குறிப்பிட்ட அளவு வினியோகிக்கப்பட்டது. இது மகிவும் சிக்கலாக இருந்தது" என்றார் Lin Li.
1 2 3 4 5 6 7 8