இன்னல்மிக்க காலக் கட்டத்தைக் கழித்து மீண்ட மக்கள், மாதிரிகளை மனதில் நிலைநாட்ட வேண்டியிருந்தது. ஹூனான் மாநிலத்தைச் சேர்ந்த, விபத்தில் உயிரிழந்த விடுதலைப் படைவீரரான Lei Feng, சீன மக்களின் மனதில் மாதிரியாக மாறினார். 1963ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 5ஆம் நாள், "தோழர் Lei Fengகிடமிருந்து கற்றுக்கொள்வது" என்ற காணிக்கை வாசகத்தை Mao Ze Dong எழுதினார். Lei Fengகிடமிருந்து கற்றுக்கொள்ளும் இயக்கம் சீனா முழுவதிலும் நடைபெற்றது. மற்றவருக்காக சேவை புரியும் Lei Fengகின் எழுச்சி, Lin Li போன்ற அதிகப்படியான இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்தது. Lin Li கூறியதாவது: "அப்போதைய மக்கள் தன்னலமற்றவர்கள். அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்தனர்"என்றார், அவர். 1966ஆம் ஆண்டு அளவில் மிகப் பெரிய பண்பாட்டு இயக்கம் துவங்கியது. செந்நிறம் விரைவாக சீனாவில் பரவியது. 1968ஆம் ஆண்டு, தலைவர் Mao முன்வைத்த "படித்த இளைஞர்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்" என்ற முழக்கத்தின் ஊக்கத்துடன், நகரங்களில் உள்ள இடைநிலைப் பள்ளி மாணவர்கள், தொகுதித் தொகுதியாக தத்தமது பெற்றோர், உற்றார் உறவினர் ஆகியோரை பிரிந்து, சொந்த ஊரிலிருந்து வெளியேறி, கிராமப்புறங்களுக்கும், எல்லைப் பிரதேசங்களுக்கும் சென்றனர். கிராமப்புறங்கள் அல்லது மலைப் பிரதேசங்களுக்குச் சென்று பணி புரியும் நடவடிக்கையில் சுமார் 2 கோடி இளைஞர்கள் சேர்ந்தனர். இந்நடவடிக்கை, சீனாவின் ஒரு தலைமுறையினரிடையில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. 1 2 3 4 5 6 7 8
|