லின் லீ பல்கலைக்கழகத்தில் நுழைந்ததற்கு பிந்தைய 2வது ஆண்டின் இறுதியில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வு பெய்ஜிங்கில் நடைபெற்றது. முக்கிய பணி மற்றும் மக்களின் கவனத்தை சோஷியலிச நவீனமயமாக்கக் கட்டுமானத்திற்கு திசை திருப்ப வேண்டும் என்று இக்கூட்டம் கோரியது. இக்கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய சில நாட்களில், ஆன் ஹுய் மாநிலத்தின் ஷியௌ காங் கிராமத்திலுள்ள 18 விவசாயிகள், கூட்டாண்மையிலான நிலத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரிப்பது பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். பெய்ஜிங்கிலிருந்து 1,000கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ள இவ்விவசாயிகளின் இந்த துணிச்சலான செயல், லி மிங்சாய் உள்ளிட்ட முழு நாட்டின் விவசாயிகளின் தலைவிதியை மாற்றியது. பின்னர், ஃபெங் யாங் மாவட்டத்தின் ஷியௌ காங் கிராமத்தில் ஏற்பட்ட சீர்திருத்தம், வேளாண் உற்பத்தியிலான குடும்ப உடன்படிக்கை பொறுப்பு முறையாக வளர்ந்தது. தெங் ஷியௌ-பிங் உள்ளிட்ட நாட்டுத் தலைவர்களின் உறுதிப்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்துடன், இவ்வமைப்புமுறை விரைவாக நாடளவில் பரவல் செய்யப்பட்டது. நீண்டகால உடன்படிக்கை மூலம் கூட்டாண்மையிலான விளைநிலத்துக்கு, விவசாயக் குடும்பங்கள் பொறுப்பேற்பது, இச்சீர்திருத்தத்தின் மிக முக்கிய அம்சமாகும். இதன் மூலம், விவசாயிகள் இந்த விளைநிலத்தின் பயன்பாடு மற்றும் பங்கீடு தொடர்பான தற்சார்பு உரிமையை பெற்றனர். இச்சீர்திருத்தம், சீனாவில் 30ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையிலுள்ள சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பப் பணிக்கான கதவையும் திறத்துவிட்டது. இவ்வமைப்புமுறை நடைமுறைக்கு வந்த பின், லி மீங் சாயின் குடும்பம் விரைவாக கிராமத்தில் 0.3 ஹேக்டர் நிலங்களை பகிர்ந்து கொண்டு, மேலதிக வருமானத்தை கொண்டுவரும் கஷ்கொட்டை மரங்களை பயிரிட்டது. குடும்ப உடன்படிக்கை பொறுப்பு முறையின் மூலம், பல்வேறு குடும்பங்கள் மிகச் சிறந்த வழிமுறையைத் தேட வேண்டும். யாரும் அவரவர் உரிமையில் அத்துமீறல் செய்யக் கூடாது. தம் விருப்பத்துக்கு இணங்க, தத்தமது விளைநிலத்தில் பல்வகை பயிர்களை பயிரிடலாம். அப்போது பழ மரங்களை பயிரிட்டேன். வெளிநாட்டு வர்த்தக வாரியத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு வணிகம் செய்ததால், அதிக ஊக்கம் ஏற்பட்டது. எனவே, மூன்றே ஆண்டுகளில், பயன் பெறப்பட்டது என்று லி மிங் சாய் தெரிவித்தார். லி மிங் சாயின் குடும்பம் போல், கிராமப்புறப் பொருளாதாரம் சுறுசுறுப்பாகியதால், சீனாவின் மிகப்பல விவசாயிகளின் வருமானம் பெருமளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1 2 3 4 5 6 7 8
|