தென்சியௌபிங் தென்சீனாவில் பணிப் பயணம் மேற்கொண்ட அடுத்த ஆண்டில் லீமின்சாய் வாழ்கின்ற குவேந்தி கிராமம் காட்சியிடப் பிரதேசமாக மாறியது. வீட்டுக்கு அருகிலுள்ள மலைகளும் நீரும் தங்களுக்கு செல்வம் கொண்டுவருமென விவசாயிகள் நம்ப வில்லை. ஒரு நாள் வழி இழந்த பயணியர் சிலர் லீமின்சாயின் முற்றத்துக்கு வந்தனர். அப்போது அவருடைய மகள் shanshuzhi அவர்களை உபசரித்தார். இது எதேச்சையான ஒரு அனுபவமே. ஆனால் சுற்றுலா உணவு விடுதி நடத்த shanshuzhiக்கு அப்போதுதான் எண்ணம் வந்தது. மற்றவர்கள் எப்படி தொழில் நடத்துகின்றனர் என்று பார்வையிட அவர் நகரங்களுக்கு சென்று மறைமுகமாக அனுபவங்களைக் கற்றுக் கொண்டார். நான்கு அறைகளில் 9 படுக்கைகளை வைப்பதன் மூலம் சுற்றுலா பயணத் துறைச் சார்ந்த தொழிலை துவக்கிய அவர் இப்போது இரண்டு முற்றங்கள் கொண்ட விடுதியை நடத்தி வருகிறார். 2006ம் ஆண்டு சீனாவில் விவசாயிகளுக்கான சிறப்புக் தொழில் ஒத்துழைப்புச் சட்டம் வெளியிடப்பட்டது. விவசாயிகள் பல்வகை தொழில்கள் கொண்ட ஒத்துழைப்பு சங்கத்தை நிறுவ ஊக்குவிக்கப்பட்டனர். Shanshuzhi அவரது ஊரில் நாட்டுப்புறச் சுற்றுலா ஒத்துழைப்புச் சங்கத்தின் தலைவராகியுள்ளார். நாட்டுப்புறச் சுற்றுலாத் துறை குறிப்பிட்ட காலகட்டத்தில் வளர்ந்த பின் தனிநபராக நடத்த போதிய ஆற்றல் இருக்காது. ஒத்துழைப்புச் சங்கத்தை நிறுவுவதன் மூலம் நாங்கள் குவேந்தி கிராமத்தின் 47 குடும்பங்கள் இணைந்த நாட்டுப்புறச் சுற்றுலாத் தொழிலை நடத்தி வருகிறோம். நிர்வாகச் சட்டவிதிகளை நாங்கள் விவாதித்தோம். கிராமவாசிகள் அனைவரும் இதற்கு வாக்களித்தனர் என்று அவர் விவரித்தார். இப்போது குவேந்தி கிராமத்தில் 80 விழுக்காட்டுக் குடுபங்கள் நாட்டுப்புறச் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. சராசரி நபர்வாரி ஆண்டு வருமானம் பத்தாயிரம் யுவானை எட்டியது. மகள் இவ்வளவு திறமைசாலியாகியதை கண்ட முதியோர் லீமின்சாய் எதிர்கால வாழ்க்கை மீது முழுமையான நம்பிக்கைக் கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் நடுவண் அரசு கிராமப்புறங்களில் மருத்துவ மற்றும் முதுமைக் கால காப்புறுதியைப் பெரிதும் பரவலாக்கியதன் விளைவாக அவர் மேலும் இன்பமாக வாழ்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் லீங்லி தொழில் நிறுவனத்தின் நிர்வாகத்திலிருந்து விலகி ஓய்வு பெற்று முதுமைக்கால வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். அவர் கணவருடன் இணைந்து சுற்றுலாப் பயணம் செய்கிறார். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது அவரும் சில போட்டிகளைக் கண்டுரசித்தார். A:லீங் லி லீ மிங்சாய் ஆகோர் போல கடந்த 60 ஆண்டுகளில் கோடிக்கணக்கான சீன மக்களின் சொந்த வாழ்க்கை முன்கண்டிராத அளவில் தாய்நாட்டின் வளர்ச்சியுடன் நெருங்கி இணைக்கப்பட்டுள்ளது. B:எதிர்வரும் நாட்களில் தாய்நாட்டுடன் இணைந்து வாய்ப்பு, நெருக்கடி மற்றும் வளர்ச்சியை அனுபவிப்பதில் சீன மக்கள் அனைவரும் மேலும் பரந்த மேலும் சிறந்த உலகை எதிர்கொள்வர். A: நேயர்களே நவ சீனாவின் வைரவிழா எனும் சிறப்பு நிகழ்ச்சியை கேட்டீர்கள். B:அடுத்த முறை மீண்டும் சந்திப்போம். A:வணக்கம் நேயர்களே. 1 2 3 4 5 6 7 8
|