• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2010ம் ஆண்டு சீன அரசின் பணியறிக்கை
  2010-03-05 12:22:02  cri எழுத்தின் அளவு:  A A A   

 

உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் 8 விழுக்காட்டு வளர்ச்சி, முக்கியமாக சீரான வளர்ச்சியை வலியுறுத்துகிறது. பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றம் மற்றும் பொருளாதாரக் கட்டுக்கோப்பின் சரிப்படுத்தலை முக்கிய பணியாகக் கொள்வதில், பல்வேறு தரப்புகளுக்கு வழிகாட்டுவோம் என்று அவர் கூறினார்.

இந்த பொருளாதார வளர்ச்சி இலக்கை நனவாக்க, தலைமையமைச்சர் வென்சியாபாவ் தமது பணியறிக்கையில் பல தீர்வு நடவடிக்கைகளை முன்வைத்தார். ஆக்கப்பூர்வ நிதிக் கொள்கை மற்றும் தளர்ச்சியான நாணயக்கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது, மக்களின் நுகர்வுத் தேவையை விரிவாக்குவது, பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றத்தை விரைவுபடுத்துவது, பொருளாதார கட்டுக்கோப்பை மேம்படுத்துவது, பிரதேசங்களிடை பொருளாதாரத்தின் ஒருங்கிணைப்பான வளர்ச்சியை முன்னேற்றுவது, நகரமயமாக்கத்தையும் புதிய கிராமப்புறத்தின் கட்டுமானத்தையும் ஒருங்கிணைப்பது முதலியவை அவற்றில் இடம்பெறுகின்றன. தவிர, புதிய எரியாற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இணையம் உள்ளிட்ட புதிய தொழில்களை வளர்ப்பதையும் வென்சியாபாவ் குறிப்பிட்டார். அதேவேளை, பொருளாதாரத்தின் தொடர் நிதானத் தன்மையை நிலைநிறுத்த, பல்வகை முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் உரிய முறையில் தீர்க்க வேண்டும். குறிப்பாக, உலகப் பொருளாதர மறுமலர்ச்சியின் அடிப்படை தொடர்ந்து பலவீனமாக இருக்கும் சூழ்நிலையில், விழிப்புணர்வை உயர்த்த வேண்டும் என்று வென்சியாபாவ் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியதாவது,

நாடு கடந்த நிதி மீதான பயனுள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி பல்வகை நிதி நெருக்கடிகளைத் தடுக்க வேண்டும். ரென்மின்பி மாற்றுவிகிதத்தின் உருவாக்க முறைமையை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். நியாயமான சரிசமமான நிலையில் இந்த விகிதத்தின் நிதானத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பொருளாதாரத்தின் சீரான விரைவான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதோடு, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த சீன அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இவ்வாண்டின் அரசுப் பணியறிக்கை, மக்கள் கவனம் செலுத்திய பிரச்சினைகளுக்கு நேர்மையாக பதிலளித்தது.

அண்மையில் சீனாவில் சில பெரிய இணைய தளங்கள் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவின் படி, உறைவிடப் பிரச்சினை கவலைக்குரிய பிரச்சினையாகும். எனவே, வீடு மற்றும் நில உடைமைச் சந்தையின் நிதான வளர்ச்சியை விரைவுபடுத்துவது, முக்கிய கடமையாக கொள்ளப்பட்டு, அரசுப் பணியறிக்கையில் சேர்க்கப்பட்டது. இது பற்றி வென்சியாபாவ் கூறியதாவது:

சில நகரங்களில், வீடுகளின் விலை அளவுக்கு மீறி உயர்த்தும் போக்கை உறுதியாக கட்டுப்படுத்தி, உறைவிடத்துக்கான மக்களின் அடிப்படை தேவையை நிறைவு செய்ய வேண்டும். உத்தரவாதத் தன்மை வாய்ந்த அமைதியாக வாழ்ந்திட உதவும் திட்டப்பணியை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, நகரவாசிகளின் வசிப்பிடத் தேவைக்கான நுகர்வை ஆதரிக்க வேண்டும். கள்ளத்தன்மை வாய்ந்த வீட்டு வர்த்தகச் செயல்களைக் கட்டுப்படுத்தி, வீடு மற்றும் நில உடைமைச் சந்தையின் ஒழுங்கை வரையறைப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

உறைவிட பிரச்சினையைத் தவிர, வேலை வாய்ப்பு அதிகரிப்பு, சமூகக் காப்புறுதி அமைப்பு முறை மேம்பாடு, வருமான பங்கீட்டு அமைப்பு முறையின் சீர்திருத்தம், மருத்துவ மற்றும் சுகாதார சீர்திருத்தம், கல்வி லட்சியத்தின் வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி, அரசுப் பணியறிக்கை திட்டவட்டமான தீர்வு நடவடிக்கைகளை விபரமாக விளக்கிக்கூறியது.

1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040