• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன எழுத்துக்கள்
நீண்ட வரலாறுடைய சீன எழுத்துக்கள், சீனாவின் ஐயாயிரம் ஆண்டு நாகரிகத்தைப் பரப்பி வருகின்றன. சீனத் தேசிய இனப் பண்பாட்டின் புதைபடிவமாகவும், வரலாற்றைத் தெரிவிக்கும் கருவியாகவும், மூதாதையருடைய மதிநுட்பத்தின் தொகுப்பாகவும், அடுத்த தலைமுறையினர் ஆய்வு செய்வதற்கான அடிப்படையாகவும் சீன எழுத்துக்கள் திகழ்கின்றன. சீன எழுத்துக்களின் அழகு, அவற்றின் உயிர்த்தன்மையில் காணப்படுகிறது. அந்த எழுத்துக்களைத் தெரிந்துகொண்ட பிறகு, அவற்றிலிருந்து தாராளமான புதிய சேர்க்கைகள் மற்றும் புத்தாக்கங்களைப் பெறுவது மிகவும் எளிதானது. சீன எழுத்துக்களின் அழகு, அவற்றின் பரவல் அளவில் காணப்படுகிறது.
                                                                                                                           இதுவரை, உலகில் மிக அதிகமானோர் பன்படுத்துகின்ற மொழி, சீன மொழியே. தற்போது உலகில், சீன எழுத்துக்களைப் பயன்படுத்துகின்ற மக்களின் எண்ணிக்கை 140 கோடியாகும். இது, உலக மக்கள் தொகையில் 26 விழுக்காடாக உள்ளது.
யார் சீன எழுத்துக்களைப் படைத்தது?சீனாவின் வரலாற்றில், காங் ஜியே என்னும் ஒருவர் படைத்தார். ஆனால்,அவற்றைப் பரந்துபட்ட உழைப்பாளிகள் படைத்துள்ளனர் என்று மேன்மேலும் தொல் பொருளாராய்ச்சியில் காணப்பட்ட கண்டுபிடிப்புகள் மெய்ப்பித்துள்ளன.
உருவாக்கம்
சீன எழுத்துக்கள், அவற்றின் பொருளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. லியூ சூ என்பது, சீன எழுத்துக்கள் உருவாக்கப்படும் வழியாகும். 1. ஷியாங் ஷிங் வடிவம் பொருளின் வடிவத்தை காட்டுவது. 2. ஷி ஷி குறிப்பிட்ட அம்சத்தைக் குறிப்பது பல்வகை அடையாளங்கள் மூலம் போருளைக் காட்டுவது. 3. பொருளை வெளிப்படுத்துவது இரண்டு அல்லது இரண்டுக்கு மேலான வடிவங்களைக் கொண்டு, ஒரு புதிய பொருளை வெளிப்படுத்துவது. 4. ஷிங் ஷெங் வடிவ மற்றும் ஒலி அடையாளங்கள் மூலம் பொருளை வெளிப்படுத்துவது. 5. ஷீவன் ஷீ ஒரே பொருளை பல்வடிவங்களில் வெளிப்படுத்துவது. வடிவத்தைப் பார்த்தால் தான், அதன் பொருளை அறிய முடியும். 6. ஜியா ஜியே உச்சரிப்பை வாங்கி, பொருளைத் தெரிவிப்பது.
பரிணாமப் போக்கு

அமைப்பு முறைமை உருவாக்கம் முலான, சீன எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சிப் போக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது.

1.ஆமை ஓட்டில் செதுக்கப்பட்டமை சீனாவின் மிக முன்னதான முழுமையான மொழி எழுத்துக்கள். இவை ஷாங் வம்சக் காலத்தில், ஆமை ஓட்டிலும், விலங்குகளின் எலும்புகளிலும் செதுக்கப்பட்ட எழுத்துக்களாகும்.

2.ஜிங் எழுத்துக்கள் இவை ஷாங் மற்றும் சோ வம்சக் காலத்தில், வெண்கலத்தில் செதுக்கப்பட்ட எடுத்துக்கள் ஆகும்.

3.ஷீவன் எழுத்துக்கள்ஆமை ஓட்டில் செதுக்கப்பட்ட எழுத்தும், ஜிங் எழுத்துக்கள், லியூ எழுத்துக்கள், போரிடும் நாடுகள் ஆறு நாட்டு எழுத்துக்கள் ஆகியவை பெரிய சிவான் எழுத்துக்களில் அடங்கும். சிறிய சிவான் எழுத்துக்கள் ச்சின் வம்சக் காலத்தின் பொது எழுத்துக்களாகும்.

4.லி எழுத்துக்கள் ஷீவன் எழுத்துக்கள் எளிதாக்கப்பட்ட பிறகு, ச்சின் வம்சக் காலத்தில் லி எழுத்துக்கள் உருவாகினது. அவை ஹான் வம்சக் காலத்தில் புகழ்பெற்ற இருந்தன. எனவே, அவை "ஹான் ச்சின்"என்ற பெயரைப் பெற்றன.

5.சாவ் எழுத்துக்கள் லி எழுத்துக்கள் எளிதாக்கப்பட்ட பிறகு, ஹான் வம்சக் காலத்தில் சாவ் எழுத்துக்கள் உருவாகின. அவை எளிதான கட்டமைப்பு வாய்ந்தவை.

6.கை எழுத்துக்கள்லி எழுத்துக்களின் அடிப்படையில், கை எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. அவை இன்னும் தற்போதைய கையால் எழுதப்படும் எழுத்துக்களின் வரையறையாக விளங்குகின்றன.

7.ஷிங் எழுத்துக்கள்கை எழுத்துக்களின் அடிப்படையில், ஷிங் எழுத்துக்கள் உருவாகின. கை எழுத்துக்கள், சாவ் எழுத்துக்கள் ஆகியவற்றின் குறைபாடுகளைச் சமாளிப்பதற்காக, அவை உருவாக்கப்பட்டன.

தோற்றம்&வளர்ச்சி

金(ஜின்)உலோகம்

木(மூ)மரம்

水(சுய்)நீர்

火(ஹுவ்)நெருப்பு, தீ

土(டு)மண்

声(ஷெங்)ஒலி

雨(யு)மழை

河(ஹெ)ஆறு

鸟(நியவ்)பறவை

鱼(யு)மீன்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040