பொன்விழா: தமிழ்ப் பிரிவின் வளர்ச்சி
| |
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் துவங்கியது. நாள்தோறும் இந்தியா மற்றும் உலகின் மற்ற நாடுகளில் சிற்றலை ஒலிபரப்பும், இலங்கையில் பண்பலை ஒலிபரப்பும் வழங்கப்படுகின்றன. மேலும், இணையதளம், செல்லிடப்பேசி செய்தி, தமிழொலி எனும் இதழ் போன்ற பல்லூடக சேவைகள் வழங்கப்படுகின்றன.
| |
|
|
சிறப்பு கட்டுரை உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்ச் சேவை, தொடக்கத்தில் நாள்தோறும் 30 நிமிட நேர சிற்றலைவரிசை நிகழ்ச்சிகளை வழங்கியதிலிருந்து, தற்போது சிற்றலைவரிசை, பண்பலை, இணையத்தளம், செல்லிடப்பேசிச் சேவை, தமிழொலி எனும் இதழ் முதலிய பல் ஊடக வடிவங்களுடைய முழு ஊடகப் பரப்பு மேடையாக உருவாகியுள்ளது. சீன வானொலி தமிழ்ச் சேவை இப்போது நாள்தோறும் 8 மணி நேர நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் 4 மணி நேர சிற்றலைவரிசை நிகழ்ச்சிகளும், இலங்கை கொழும்பில் பண்பலையில், 4 மணி நேர நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படுகின்றன.
| |
தலைப்புச் செய்தி பொன்விழா கருத்தரங்கு! சீன வானொலி தமிழ்ப் பிரிவின் பொன்விழாவை முன்னிட்டு, உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் ஆகஸ்ட் 3ஆம் நாள் நடைபெறும். இக்கருத்தரங்கில் சீனாவுக்கான இந்தியா, இலங்கை மற்றும் சிங்கபூர் தூதாண்மை அலுவலர்களும் இந்திய நேயர்களும், சீனச் சமூக மற்றும் அறிவியல் கழகத்தின் நிபுணர்களும், தமிழ்ப் பிரிவின் மூத்தப் பணியாளர்களும் அழைப்பின் நேரில் கலந்து கொள்வார்கள்.
| |
ஊடகம் கருத்து |